Homeசெய்திகள்தமிழ்நாடுசபரிமலை சென்று வீடு திரும்பிக்கொண்டிருக்கையில் வேன் கவிழ்ந்து விபத்து

சபரிமலை சென்று வீடு திரும்பிக்கொண்டிருக்கையில் வேன் கவிழ்ந்து விபத்து

-

- Advertisement -

சபரிமலை சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் வந்த வேன் கவிழ்ந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

accident

we-r-hiring

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே திண்டுக்கல்- கரூர் தேசிய நெடுஞ்சாலையில் ஆந்திர மாநிலம் சத்யசாய் ஜில்லா கதிர் மண்டலம் என்ற பகுதியைச் சேர்ந்த 22 ஐயப்ப பக்தர்கள் கடந்த 31.11.2022 ஆம் தேதி சபரிமலை யாத்திரை சென்று சொந்த ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தபோது விடுதலைபட்டி என்ற பகுதியில் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து எதிர் புறம் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் பக்தர்கள் வந்த வேன் அப்பளம் போல் நொறுங்கியது. இதில் சிராமுலு நாயக் 42 என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.மேலும் ஐந்து பேருக்கு படுகாயம் அடைந்த நிலையில் வேடசந்தூர் மற்றும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து குறித்து கூம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

MUST READ