ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு நான்கு நாட்கள் பக்தர்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் திருக்கோவில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ள கோவிலுக்கு தமிழ் மாதங்களில் அமாவாசை பௌர்ணமி பிரதோஷம் உள்ளிட்ட நாட்கள் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

இந்தியில் மார்கழி மாத பிரதோஷம் 4 ஆம் தேதியும் அதனைத் தொடர்ந்து 7ஆம் தேதி பௌர்ணமி தினமும் வர இருப்பதால் பக்தர்கள் 4,5,6,7 ஆகிய நான்கு நாட்கள் மட்டும் மலையேறி சாமி தரிசனம் செய்ய வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக காய்ச்சல், சளி, இருமல் உள்ளவர்கள் கோவிலுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் 10 வயதுக்கு உட்பட்டவர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மலையற அனுமதி கிடையாது எனவும் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
