பின்னால் பைக் வருவதை கவனிக்காமல் கார் கதவை திறந்ததால் பறிபோன உயிர்
நாமக்கல் அருகே பின்னால் பைக் வருவதை கவனிக்காமல் கார் கதவை திறந்ததால் இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் அடுத்த வளையப்பட்டியை சேர்ந்தவர் சரவணன். இவர் விவசாயம் செய்து கொண்டு ஆட்டோ ஓட்டுனராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் திருமணமாகி 5 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த மாதம் 30 ஆம் தேதி நாமக்கல் அரசு மருத்துவமனையில் அவரது மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. மனைவியுடன் தங்கி இருந்த சரவணன் 31-ம் தேதி சொந்த ஊருக்கு செல்வதற்காக நாமக்கல் டாக்டர் சங்கரன் சாலை வழியாக இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது பாரத ஸ்டேட் வங்கியின் ஏ.டி.எம் அருகே சென்ற போது சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த காரில் இருந்த பெண் ஒருவர் பின்னால் வாகனம் வருவதை கவனிக்காமல் திடீரென தனது காரின் கதவை திறந்தார்.
#Watch | கவனக்குறைவால் பறிபோன உயிர்!
பின்னால் பைக் வருவதை கவனிக்காமல் கார் கதவை திறந்த மருத்துவர் சித்ரா.. பைக்கில் வந்த சரவணன் என்பவர் பரிதாபமாக உயிரிழப்பு
கடந்த ஆகஸ்ட் 31ம் தேதி நடந்த இந்த சம்பவம் குறித்து, நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்… pic.twitter.com/X4q8WQXkHn
— Sun News (@sunnewstamil) September 30, 2023
அதில் மோதிய சரவணன் சாலையில் விழுந்து தலையில் பலத்த காயம் அடைந்தார். அதனைத் தொடர்ந்து அவர் கோவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நிலையில் ஆகஸ்ட் 31 ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த விபத்துக்கு காரணமான காரை ஓட்டி வந்த நாமக்கல்லை சேர்ந்த மருத்துவர் சித்ரா என்பதும் சாலையின் இருபுறங்களிலும் பார்க்காமல் அலட்சியமாக காரின் கதவை திறந்ததே காரணம் என்பதும் காவல் துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. இச்சம்பவம் குறித்து நாமக்கல் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் சரவணன் விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.