Homeசெய்திகள்தமிழ்நாடுஅதிரடியாக உயர்ந்த ஆபரண தங்கத்தின் விலை

அதிரடியாக உயர்ந்த ஆபரண தங்கத்தின் விலை

-

- Advertisement -

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.328அதிகரித்து 41 ஆயிரத்து 528 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

gold
சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாகவே ஏற்ற, இறக்கத்துடன் இருந்துவருகிறது. இந்நிலையில் கார்த்திகை மாதம் நிறைவடைந்து மார்கழி மாதம் தொடங்கியுள்ளது.சுப நிகழ்ச்சிகள் ஏதும் இல்லை என்ற போதிலும் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. இதற்கு கடந்த ஜூலை மாதம் மத்திய அரசு தங்கத்திற்கான இறக்குமதி வரியை உயர்த்தியதே காரணம் என தெரிவிகிறது. கடந்த மாதம் 21 ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் 41 ஆயிரத்தை நெருங்கிய நிலையில், அதன்பின் குறைய தொடங்கியது. ஆனால் புத்தாண்டு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தற்போதைய சூழலில் ஒரு சவரன் தங்கம் 41 ஆயிரத்தை தாண்டி விற்பனையாகிவருகிறது.

we-r-hiring

இன்றைய நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.328 உயர்ந்து ரூ.41,528 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.41 உயர்ந்து ரூ. 5,190-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி விலை ஒரு ரூபாய் அதிகரித்து ரூ.74.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை 1000 ரூபாய் உயர்ந்து ரூ.74,500 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 

MUST READ