
மணிப்பூர் மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட முடியாததால், மாநில அரசின் மீது மக்கள் கோபத்தில் இருப்பதாக அம்மாநில பா.ஜ.க. தலைவர், கட்சியின் தேசிய தலைமைக்கு கடிதம் எழுதியுள்ளார்.

“மதுரை-கோவை, மதுரை- விழுப்புரம் ரயில்களின் நேரம் மாற்றம்”- தெற்கு ரயில்வே அறிவிப்பு!
கடந்த நான்கு மாதங்களாக மணிப்பூர் மாநிலத்தில் அமைதி சீர்குலைந்திருக்கும் நிலையில், பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவுக்கு பா.ஜ.க.வின் மாநில தலைவர் சாரதா தேவி கடிதம் எழுதியுள்ளார்.
அதில், வன்முறைகளை முடிவுக்கு கொண்டு வர முடியாததால், மாநில அரசு மீது மக்களுக்கு ஏற்பட்ட அதிருப்தி கோபமாக மாறியுள்ளதாக சாரதா தேவி குறிப்பிட்டுள்ளார். வன்முறைகளால் இடம் பெயர்ந்தவர்களை, அவரவர் சொந்த இடத்தில் மீண்டும் குடியமர்த்தும் பணியை விரைவுபடுத்த வேண்டும் என்றும், தேசிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்றும், மாநில பா.ஜ.க. தலைவர் சாரதா தேவி கேட்டுக் கொண்டுள்ளார்.
வன்முறைகளில் சொத்துகளைப் பறிக்கொடுத்தவர்களுக்கு உரிய இழப்பீடும் விரைந்து வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த கடிதத்தில் கட்சியின் மாநில தலைவர் சாரதா தேவி, துணைத் தலைவர் சித்தானந் உள்பட எட்டு பேர் கையெழுத்திட்டுள்ளனர்.
தீப்பிடித்து எரிந்த ஆட்டோவுக்குள் எரிந்த நிலையில் கிடந்த சடலம்
மணிப்பூர் மாநிலத்தில் முதலமைச்சர் பிரேன் சிங் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், அம்மாநில கட்சி நிர்வாகத்தைக் குறைக்கூறி தேசிய தலைமைக்கு கடிதம் எழுதியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.