தீப்பிடித்து எரிந்த ஆட்டோவுக்குள் எரிந்த நிலையில் கிடந்த சடலம்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே தீப்பிடித்து எரிந்த ஆட்டோவுக்குள் எரிந்த நிலையில் கிடந்த சடலத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே மலையடிக்குறிச்சி கீழசிந்தாமணி பெரியகுளத்துக்குள் ஆட்டோ ஒன்று எரிந்த நிலையில் அந்த ஆட்டோக்குள் ஆண் சடலம் எரிந்து சாம்பலாக இருந்ததை கண்ட அப்பகுதி மக்கள் வாசுதேவநல்லூர் மற்றும் புளியங்குடி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கனர். இதையடுத்து விரைந்து வந்த காவல்துறையினர் இது குறித்து விசாரணை மேற்கொண்ட போது அது மலையடிகுறிச்சி பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் வெள்ளத்துரை என்பது தெரிய வந்தது. மேலும் இவர் அப்பகுதியில் ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வந்ததாகவும் சில நாட்கள் மன அழுத்தத்தில் இருந்ததும், சிலருக்கு போன் மூலமாக இருக்க பிடிக்கவில்லை என வெள்ளத்துரை தெரிவித்தது தெரியவந்தது.

இந்நிலையில் இது குறித்து தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இச்சம்பவம் அப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தடவியல் நிபுணர்கள் இடத்திற்கு வந்து தடயங்கள் உதவியுடன் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
