spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு"தி.மு.க. வேட்பாளர் தோல்வியடைந்தால் மாவட்டச் செயலாளர் நீக்கப்படுவர்"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

“தி.மு.க. வேட்பாளர் தோல்வியடைந்தால் மாவட்டச் செயலாளர் நீக்கப்படுவர்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

-

- Advertisement -

 

"விண்ணப்பங்களைப் பெற ரேஷன் கடைகளில் சிறப்பு முகாம்களை நடத்த வேண்டும்"- மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தல்!
File Photo

தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தொகுதிப் பார்வையாளர்கள் ஆலோசனை கூட்டம் அக்கட்சியின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொளி வாயிலாக நடைபெற்றது.

we-r-hiring

சென்னையில் இன்று 41 ரயில்கள் ரத்து!

சுமார் இரண்டு மணி நேரம் நடந்த இந்த கூட்டத்தில், நாடாளுமன்றத் தேர்தல் பணிகள் தொடர்பாக கட்சி நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். கூட்டம் தொடங்கியதும் சரியாக செயல்படாத தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் 7 பேரை முதலில் பேச சொன்னதாகத் தெரிகிறது.

இவர்களில் ஐந்து பேர் வட மாவட்டங்களையும், இரண்டு பேர் தென் மாவட்டங்களையும் சேர்ந்தவர்கள் என்று ஏழு பேர் மீதும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிருப்தி தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. அவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என அதிருப்திக்குள்ளான மாவட்டச் செயலாளர்களிடம் கேள்வி எழுப்பியதாகவும் தொகுதிப் பார்வையாளர்களுக்கு சரியாக ஒத்துழைக்காத மாவட்டச் செயலாளர்கள் மாற்றப்படுவார்கள் என்று மு.க.ஸ்டாலின் எச்சரித்ததாகவும் தெரிகிறது.

“மக்களின் குரலை எதிரொலிக்கும் மன்றம்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பாளர் தோல்வியுற்றால், அந்த மாவட்டச் செயலாளர் நிச்சயமாக ப் பதவி நீக்கம் செய்யப்படுவார் என்று எச்சரித்ததாகவும், கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தோல்வியடைந்தால் அதற்கு காரணமானவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுப்பேன் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டிப்புடன் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

MUST READ