தமிழக அரசு கொண்டுவந்துள்ள சட்டம் அனைவருக்கும் பொதுவானது அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடியது, அதை அடிப்படையாக வைத்து ஒன்றிய அரசு அந்த சட்டத்தை கொண்டு வந்தால் அது வரவேற்கத்தக்கதாக இருக்கும், அதை விடுத்து ஆன்லைன் சூதாட்டங்களை நடத்துபவர்களை பாதுகாக்கின்ற வகையில் மறைமுகமாக செய்கின்ற செயலாக அது இருந்தால் நிச்சயமாக அது கண்டிக்கத்தக்கதாக இருக்கும்.
வரும் 6ம் தேதி தச்சங்குறிச்சியில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு அனைத்து பணிகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. புதுக்கோட்டையில் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேட்டி.


புதுக்கோட்டை ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை கொண்டாடும் வகையில் அப்பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு திமுக இளைஞரணி சார்பில் நோட்டு, புத்தகங்கள், எழுதுகோல் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திமுக வடக்கு மாவட்ட செயலாளர் செல்லப்பாண்டியன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்து கொண்டு மாணவிகளுக்கு புத்தகங்கள், நோட்டுகள், எழுதுகோல்களை வழங்கினார். மேலும் இதில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா புதுக்கோட்டை நகராட்சி நகர் மன்ற தலைவர் திலகவதி செந்தில் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
பின்னர், தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில்:
ஆன்லைன் ரம்மி, உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டங்கள் நடத்துகின்றவர்களை பாதுகாக்கின்ற சட்டமாக, அவர்களிடம் இருந்து வரி வசூல் செய்கின்ற சட்டமாகவோ அது இருக்கக் கூடாது என்பது தான் தமிழக அரசின் நோக்கம். முழுமையாக ஆன்லைன் ரம்மி தடை செய்ய வேண்டும், அதை நாங்கள் வலியுறுத்துவோம். மேலும் ஒன்றிய அரசு ஆன்லைன் ரம்மி குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையை படித்துவிட்டு இது குறித்து முழுமையாக கருத்து தெரிவிக்கப்படும்,

தமிழக அரசு கொண்டுவந்துள்ள சட்டம் அனைவருக்கும் பொதுவானது, அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடியது, அதை அடிப்படையாக வைத்து ஒன்றிய அரசு அந்த சட்டத்தை கொண்டு வந்தால் அது வரவேற்கத்தக்கதாக இருக்கும், அதை விடுத்து ஆன்லைன் சூதாட்டங்களை நடத்துபவர்களை பாதுகாக்கின்ற வகையில் மறைமுகமாக செய்கின்ற செயலாக அது இருந்தால் நிச்சயமாக அது கண்டிக்கத்தக்கதாக இருக்கும்.
தமிழகத்திலேயே ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் தான் நடைபெறும். அதேபோல், வருகின்ற 6ம் தேதி கந்தர்வக்கோட்டை அருகே உள்ள தச்சங்குறிச்சியில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றது.
ஜல்லிக்கட்டு போட்டி முறைப்படி நடத்தவே ஆன்லைன் பதிவு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த ஆன்லைன் பதிவை ஏற்று தேதியை முறைப்படுத்தி பதிவு செய்வதை விழா நடத்துபவர்கள் செய்து வருகின்றனர்.

ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு இன்சூரன்ஸ் கட்டாயம் விழா நடத்துபவர்களை இன்சூரன்ஸ் எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவர்களும் இன்சூரன்ஸ் எடுத்து கொள்வதாக தெரிவித்துள்ளனர், அந்த இன்சூரன்ஸ்யை காளை பிடிக்கக்கூடிய வீரர்களையும் சேர்த்து தான் இன்சூரன்ஸ் எடுக்க ஏற்பாடுகள் செய்யப்படும் என்று தெரிவித்தார்.


