பாலிவுட் நடிகை காயத்ரி ஜோஷி விபத்தில் சிக்கியதாகக் கூறப்படுகிறது.
ஷாருக்கான் உடன் ஸ்வதேஸ் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர் காயத்ரி ஜோஷி. அவர் நடித்த ஒரே படம் அது தான்.

வீடியோ ஜாக்கி மற்றும் மாடலாகவும் இருந்துவந்தார். 2005 ஆம் ஆண்டு தொழிலதிபர் விகாஸ் ஓபராய் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
காயத்ரி தனது கணவர் உடன் இத்தாலிக்கு சுற்றுலா சென்றுள்ளார். இந்நிலையில் இன்று ஒரு பயங்கரமான சாலை விபத்தை சந்தித்துள்ளார். இந்த விபத்து ஏற்பட்ட போது காயத்ரி ஜோஷி மற்றும் அவரது கணவர் விகாஸ் ஓபராய் இருவரும் தங்களது உயர்ரக லம்போர்கினி காரில் சென்று கொண்டிருந்தனர்.
இந்த விபத்தில் தானும் தனது கணவரும் நலமாக இருப்பதாக காயத்ரி ஜோஷி ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். சர்டினியா சூப்பர்கார் சுற்றுப்பயணத்தின் போது, சர்டினியா பகுதி முழுவதும் சொகுசு கார்களில் பங்கேற்பாளர்கள் அணிவகுத்துச் செல்லும் மாபெரும் நிகழ்வின் போது இந்த விபத்து நிகழ்ந்தது கேமராவில் பதிவாகியுள்ளது.