
திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தொகுத்துள்ள ‘தாய்வீட்டில் கலைஞர்’ என்ற நூல் வெளியீட்டு விழா தஞ்சாவூரில் நடைபெற்றது.

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் சுப்மன் கில் பங்கேற்பதில் சிக்கல்!
விழாவில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தி.க.வும், தி.மு.க.வும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என கருணாநிதி கூறியுள்ளார். தி.க.வும், தி.மு.க.வும் இரட்டைக் குழல் துப்பாக்கி என அறிஞர் அண்ணா தெரிவித்துள்ளார். மானமிகு சுயமரியாதைக்காரன் என்பது தான் கருணாநிதியின் 95 ஆண்டு வாழ்க்கையின் அடையாளம்.
தி.க., தி.மு.க. இடையேயான நட்பும், உறவும் உலகில் வேறு எந்த இயக்கத்திற்கும் இருக்க முடியாது. பெரியார் மறைந்த போது அவருக்கு அரசு மரியாதை அளித்தவர் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி. பெரியாருக்கு மரியாதைத் தருவதற்காக, ஆட்சியை இழக்கவும் தயாராக இருந்தார் கருணாநிதி. தி.க.வும், தி.மு.க.வும், கருப்பும், சிவப்பும் போல இணைந்தே இருக்கிறோம்; இணைந்தே இருப்போம்.
ஆசிய விளையாட்டு- ஹாக்கியில் இந்தியாவுக்கு தங்கம்!
என் அண்ணன் அழகிரி திருமணத்தில் தந்தை பெரியாருக்கு நான்தான் உணவுப் பரிமாறினேன். இந்தியா கூட்டணி, அரசியல் கூட்டணி அல்ல; கொள்கை கூட்டணி. தமிழகம் இழந்த உரிமைகளை மீட்பதில் உறுதியாக உள்ளோம். அனைவரது குரலுக்கும் மதிப்பு தரவே இந்தியா கூட்டணியை உருவாக்கியுள்ளோம். பட்டியலின ஒதுக்கீட்டை அழிப்பதே மத்திய அரசின் நோக்கம்” என்று குற்றம் சாட்டியுள்ளார்.


