
மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் மறைவையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து அணியை வீழ்த்தி வரலாற்று சாதனையைப் படைத்த ஆப்கானிஸ்தான் அணி!
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் பீடத்தின் தலைவர் பங்காரு அடிகளார் (வயது 82) உடல் நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், பிரதமர் நரேந்திர மோடி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “பங்காரு அடிகளார் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது. ஆன்மீகம், கருணை நிறைந்த அவரது வாழ்க்கை என்றென்றும் பலருக்கு வழிகாட்டும் வெளிச்சமாக இருக்கும். அயராத சேவை, கல்விக்கான முக்கியத்துவத்தின் மூலம் நம்பிக்கை, அறிவை விதைத்தார்.
அவரது பணி பல தலைமுறைகளுக்கு ஊக்கமளித்து வழிகாட்டும்; அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.