
உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரில், நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணியை 69 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, ஆப்கானிஸ்தான் அணி வரலாற்று சாதனைப் படைத்துள்ளது.

குலசேகரப்பட்டினத்தில் தசரா திருவிழா தொடங்கியது!
டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற உலகக்கோப்பைக் கிரிக்கெட் போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சைத் தேர்வுச் செய்தது. ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர் குர்பாஸ் அதிரடியாக விளையாடி, அரைச்சதம் அடித்தார்.
குர்பாஸ் 80 ரன்களில் ரன் அவுட் ஆன பிறகு ஆப்கானிஸ்தான் பேட்டிங்கில் தொய்வு ஏற்பட்டது. ஆறாவது வீரராக களமிறங்கிய அலிகில் சற்று நம்பிக்கை அளித்து, அரைசதம் கொடுத்தார். இறுதியில் ரஹ்மாட் அதிரடி காட்ட ஆப்கானிஸ்தான் 284 ரன்களைச் சேர்த்தது.
இங்கிலாந்து அணி தரப்பில் அதில் ரஷீத் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஹாரி ப்ரூக் மட்டும் ஒருபுறம் நிதானமாக விளையாடி அரைசதம் அடித்தார்.
5 கிராம் குட்கா வைத்திருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு!
ஆப்கானிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய இங்கிலாந்து அணி, 215 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பலம் வாய்ந்த இங்கிலாந்து அணியை உலகக்கோப்பையில் வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணி வரலாற்று சாதனையைப் படைத்துள்ளது.
உலகக்கோப்பைத் தொடரில், தொடர்ந்து 14 முறை தோல்வி அடைந்த ஆப்கானிஸ்தான் அணி நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியை வீழ்த்தி தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.