Homeசெய்திகள்தமிழ்நாடுபிரபல நடிகைக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனை உறுதி!

பிரபல நடிகைக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனை உறுதி!

-

- Advertisement -

 

பிரபல நடிகைக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனை உறுதி!
File Photo

பிரபல நடிகை ஜெயப்பிரதாவிற்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையை ரத்துச் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

ஆவடி போலீஸ் கமிஷனரகத்தில் மாநில காவல்துறைக்கான மண்டல ‘ஜூடோ கிளாஸ்டர் போட்டி’ 2023

திரையரங்கு ஊழியர்களிடம் வசூலித்த இஎஸ்ஐ-க்கான வட்டி செலுத்தாத வழக்கில், பிரபல நடிகையும், பா.ஜ.க.வின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெயப்பிரதாவுக்கு, எழும்பூர் நீதிமன்றம் ஆறு மாத சிறைத் தண்டனையை விதித்திருந்தது.

அந்த தண்டனையை ரத்துச் செய்யக் கோரி, நடிகை ஜெயப்பிரதா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று (அக்.20) காலை 11.00 மணிக்கு விசாரணைக்கு வந்த போது, ரூபாய் 20 லட்சம் செலுத்தினால் மட்டுமே தண்டனையை நிறுத்தி வைத்து ஜாமீன் வழங்க முடியும் என்று தெரிவித்த உயர்நீதிமன்றம், நடிகை ஜெயப்பிரதாவை 15 நாட்களில் எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

‘செல் ஒலிபரப்பு எச்சரிக்கை’ சோதனை – பொதுமக்கள் பயப்பட வேண்டாம்

அத்துடன், தற்போதைக்கு ஜாமீன் வழங்க இயலாது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளதுடன், தீர்ப்பை நிறுத்தி வைக்கக்கோரிய மனுவைத் தள்ளுபடி செய்துள்ளது.

MUST READ