spot_imgspot_img
Homeசெய்திகள்உலகம்ஏமனில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணைகளை இடைமறித்து அளித்த போர்க்கப்பல்!

ஏமனில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணைகளை இடைமறித்து அளித்த போர்க்கப்பல்!

-

- Advertisement -

 

ஏமனில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணைகளை இடைமறித்து அளித்த போர்க்கப்பல்!
File Photo

மத்திய தரைக்கடல் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க போர்க்கப்பல், ஏமன் நாட்டில் இருந்து இஸ்ரேலை குறி வைத்து ஏவப்பட்ட ஏவுகணைகளையும், ட்ரோன்களையும் இடைமறித்து அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளன.

we-r-hiring

தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 80 உயர்வு!

ஹமாஸ்- இஸ்ரேல் மோதல் தொடங்கியது முதலே, இஸ்ரேலுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வரும் அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உறுதுணையாக போர் கப்பல்களை மத்திய தரைக்கடல் பகுதிக்கு அனுப்பி வைத்தது. அப்படி அனுப்பப்பட்ட யூஎஸ்எஸ் காரணி என்ற போர் கப்பல், செங்கடல் பகுதியில் ஏவுகணைகளையும், ட்ரோன்களையும் சுட்டு வீழ்த்தியது.

இந்த ஏவுகணைகள் இஸ்ரேலைக் குறி வைத்து ஏவப்பட்டவை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 9 மணி நேரமாக தொடர்ந்து ஏவுகணைகளையும், ட்ரோன்களையும் போர்க்கப்பல் எதிர்க்கொண்டதாகத் தெரிகிறது.

நெடுந்தொலைவில் பாய்ந்து தாக்கும் நான்கு ஏவுகணைகளையும் சுட்டு வீழ்த்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, 15 ட்ரோன்களும் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சில ஏவுகணைகள் மேலே செல்லும் பயணிகள் விமானத்தையும் வீழ்த்த வல்ல உயரத்தில் செலுத்தப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

“என் பேச்சை லைக் செய்து ஷேரும் செய்யுங்கள்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

இஸ்ரேல்- ஹமாஸ் இடையே மோதல் நடைபெறும் காசாவை விட்டு, வெகு தொலைவில் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது போர் மேலும் விரிவடையும் அபாயத்தைச் சுட்டிக்காட்டுவதாக அதிகாரிகள் கூறுகின்றன.

ஏமன் மண்ணில் இருந்து ஈரானின் ஆதரவுப் பெற்ற ஹௌதி படைகள் ஏவுகணை தாக்குதலை மேற்கொண்டதாகவும், அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஈராக்கில் அமெரிக்காவின் நிலைகளை குறி வைத்து நடைபெற்று இருப்பதாகவும் அமெரிக்கா கூறியுள்ளது.

MUST READ