
முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் வீரரும், சுழற்பந்து வீச்சாளருமான பிஷன் சிங் பேடி இன்று (அக்.23) காலமானார். அவருக்கு வயது 77.

சிவகங்கையில் 144 தடை- ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சனம்!
யார் இந்த பிஷன் சிங் பேடி?- விரிவாகப் பார்ப்போம்!
கடந்த 1946- ஆம் ஆண்டு செப்டம்பர் 25- ஆம் தேதி அன்று பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸில் பிறந்தவர் பிஷன் சிங் பேடி. இந்திய கிரிக்கெட் அணியில் 1966- ஆம் ஆண்டு முதல் 1979- ஆம் ஆண்டு வரை விளையாடி உள்ளார். 67 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய உள்ள இவர், 266 விக்கெட்டுகளையும், 656 ரன்களையும் எடுத்துள்ளார். அதேபோல், 10 ஒருநாள் போட்டிகளில் விளையாடி, 7 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
பதுங்கியிருந்தவரை கைது செய்த தனிப்படைக் காவல்துறையினர்!
கடந்த 1969- ஆம் ஆண்டு அர்ஜுனா விருதும், 1970- ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதையும் வழங்கி மத்திய அரசு கௌரவப்படுத்தியது.