spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஅரசுப் பேருந்தும், தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து!

அரசுப் பேருந்தும், தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து!

-

- Advertisement -

 

அரசுப் பேருந்தும், தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து!
Video Crop Image

வாணியம்பாடி அருகே அரசுப் பேருந்தும், தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

we-r-hiring

சென்னையில் அதிகரித்த காற்று மாசு!

சென்னையில் இருந்து பெங்களூரு நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து, எதிர் சாலையில் வந்துக் கொண்டிருந்த தனியார் பேருந்து மீது அதிவேகமாக மோதியது. திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே உள்ள செட்டியப்பனூர் கூட்டுச்சாலையில் நிகழ்ந்த இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநர் ஏழுமலை, தனியார் பேருந்து ஓட்டுநர் நதீம், அடையாறு பகுதியைச் சேர்ந்த ராஜு, ஆந்திராவைச் சேர்ந்த அஜீத், வாணியம்பாடியைச் சேர்ந்த பெரோஸ் உள்ளிட்ட ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.

தீபாவளியைக் கொண்டாட சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்கள்…. தாம்பரம், ஜி.எஸ்.டி. சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்!

விபத்தில் காயமடைந்த 20-க்கும் மேற்பட்டோர் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்த கிருத்திகா ராஜுவின் இரு குழந்தைகளும் படுகாயமடைந்தனர். வலியால் துடித்துடித்த படியே, தாயை கூப்பிட்டப் படியே இரு குழந்தைகளும் சிகிச்சைப் பெற்று வந்த நிகழ்வு, சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

MUST READ