spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதீபாவளியைக் கொண்டாட சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்கள்.... தாம்பரம், ஜி.எஸ்.டி. சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்!

தீபாவளியைக் கொண்டாட சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்கள்…. தாம்பரம், ஜி.எஸ்.டி. சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்!

-

- Advertisement -

 

தீபாவளியைக் கொண்டாட சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்கள்.... தாம்பரம், ஜி.எஸ்.டி. சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்!
File Photo

தீபாவளி பண்டிகையைக் கொண்டாட சென்னையில் வசிப்போர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்றதால், தாம்பரம், ஜி.எஸ்.டி. சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

we-r-hiring

“அமைச்சர் பொன்முடி வழக்கில் நிலைப்பாடு என்ன?”- லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உயர்நீதிமன்றம் கேள்வி!

சென்னையில் வசிக்கும் மக்கள் தீபாவளி பண்டிகையைக் கொண்டாட சொந்த ஊர்களுக்கு பேருந்துகள், ரயில்கள் மற்றும் சொந்த வாகனங்களில் சென்ற வண்ணம் உள்ளனர். இதன் காரணமாக, தாம்பரம் பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையத்தில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது.

அத்துடன், தீபாவளியையொட்டி, புத்தாடை, பட்டாசு உள்ளிட்டப் பொருட்களை வாங்கவும் பொதுமக்கள் கடைவீதிகளை நோக்கிப் படையெடுத்தனர். இதன் காரணமாக, தாம்பரம், குரோம்பேட்டை, ஜி.எஸ்.டி. சாலையில் நேற்று (நவ.10) மாலை முதல் கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.

வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மெல்ல, மெல்ல சென்றதால் பலர் அவதிக்குள்ளாகினர். போக்குவரத்து நெரிசலை சரி செய்யும் பணியில் சுமார் 100- க்கும் மேற்பட்ட காவலர்கள் ஈடுபட்டனர். சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு பொதுமக்கள் அதிகளவில் செல்லத் தொடங்கியுள்ளதால், செங்கல்பட்டு, உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

“தமிழகத்தில் வெடிகுண்டு கலாசாரம் பரவி வருகிறது”- எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

இதைக் கட்டுக்குள் கொண்டு வர சுங்கச்சாவடிகளில் போக்குவரத்தைச் சீர் செய்யும் பணிகளில் காவல்துறையினர் ஈடுபட்டனர். இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் செல்ல தனிப்பாதை அமைக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டனர்.

MUST READ