spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு"தமிழகத்தில் வெடிகுண்டு கலாசாரம் பரவி வருகிறது"- எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

“தமிழகத்தில் வெடிகுண்டு கலாசாரம் பரவி வருகிறது”- எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

-

- Advertisement -

 

"எங்கள் தரப்பு தான் உண்மையான அ.தி.மு.க."- எடப்பாடி பழனிசாமி பேட்டி!
Photo: EPS

தமிழகத்தின் ஆளுநர் மாளிகை முதல் ஆலயங்கள் வரை வெடிகுண்டு கலாசாரம் பரவி வருகிறது என்று எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

we-r-hiring

“அமைச்சர் பொன்முடி வழக்கில் நிலைப்பாடு என்ன?”- லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உயர்நீதிமன்றம் கேள்வி!

இது குறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை பாரிமுனை, ஶ்ரீ வீரபத்ரசாமி திருக்கோவில் உட்பிரகாரத்துக்கு உள்ளேயே, பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது.

இந்த கொடுஞ்செயலை வன்மையாக கண்டிப்பதுடன், இந்த குற்றச்செயலில் ஈடுபட்டவர்களை மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்துகிறேன்.நான் ஏற்கனவே பலமுறை எச்சரித்தும் இந்த விடியா தி.மு.க. அரசு சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் மீண்டும் மீண்டும் முழுத்தோல்வி அடைந்திருப்பதன் எடுத்துக்காட்டே இந்த சம்பவம்.

முன் எப்போதும் இல்லாத வகையில் தமிழ்நாட்டில், ஆளுநர் மாளிகை தொடங்கி ஆலயங்கள் வரை எங்கு பார்த்தாலும் வெடிகுண்டு கலாச்சாரம் பரவி வருவதை கண்டு மக்கள் அச்சத்துடனும் இந்த ஆட்சியாளர்கள் மீது கடுங்கோபத்துடனும் இருந்து வருகின்றனர்.

தீபாவளியைக் கொண்டாட சொந்த ஊர்களுக்கு படையெடுத்த மக்கள்…. சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல்!

எதிலும் அக்கறையின்றி செயல்படும் இந்த விடியா அரசின் பொம்மை முதல்வர் வெறும் வாய்ச்சவடால் இன்றி இனியேனும் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

MUST READ