
தமிழகத்தில் மூன்று நாட்களுக்கு கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஓமனில் கடத்தப்பட்ட தமிழரை மீட்கக்கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
இது தொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழகத்தில் இன்று (நவ.21) முதல் மூன்று நாட்களுக்கு கனமழை தொடரும். தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, மயிலாடுதுறை, திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களில் இன்று (நவ.21) கனமழை பெய்யக்கூடும்.
கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி ஆகிய மூன்று மாவட்டங்களில் நாளை (நவ.22) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தூத்துக்குடி, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தோல்விக்கு பின் இந்திய வீரர்களை ஆறுதல்படுத்திய பிரதமர் நரேந்திர மோடி!
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நவம்பர் 24, 25, 26, 27 ஆகிய தேதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது”. இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.