- Advertisement -
சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான் படம் உருவாகியுள்ளது. இதில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ரகுல் பிரீத் சிங், இஷா கோபிகர், கருணாகரன், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். 24 ஏ எம் ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. ஏ ஆர் ரகுமான் இதற்கு இசையமைத்துள்ளார். ஆர் ரவிக்குமார் இயக்கியுள்ள இப்படம் வருகின்ற பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. சயின்ஸ் பிக்சன் கதைக்களத்தில் ஒரு ஏலியனை மையமாக வைத்து இந்த படம் உருவாகி உள்ளது.

இந்த திரைப்படத்தின் டீசர் அக்டோபர் 6-ம் தேதி வெளியானது. சிவகார்த்திகேயன் நடிப்பில் அதிரடி மற்றும் ஆக்ஷன் கலந்த டீசராக வௌியானது. கிராபிக்ஸ் பணிகள் காரணமாக படத்தின் வெளியீடு தொடர்ந்து தள்ளிப்போனது. இருப்பினும், கட்டாயம் பொங்கலுக்கு திரைப்படம் வெளியாகும் என்று படக்குழு உறுதிப்படுத்தியுள்ளது.




