தமிழ் சினிமாவின் ட்ரெண்டிங் இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் கடந்த 2017 இல் வெளியான மாநகரம் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். அதைத்தொடர்ந்து கைதி, மாஸ்டர், விக்ரம் என அடுத்தடுத்த சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்துள்ளார். கடைசியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படம் வெளியானது. விஜய், திரிஷா, அர்ஜுன், சஞ்சய்தத் உள்ளிட்டோர் நடித்திருந்த இந்த படம் 627 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் தலைவர் 171 படத்திற்கான ஸ்கிரிப்ட் எழுதும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அதே சமயம் ஜி ஸ்குவாட் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கி அதன் மூலம் பல புதிய படங்களை தயாரிக்கவும் திட்டமிட்டுள்ளார்.
நேற்று இவர் தயாரிப்பில் உருவாக உள்ள பைட் கிளப் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதேசமயம் லியோ திரைப்படத்தில் பணிபுரிந்ததற்காக லோகேஷ் கனகராஜுக்கு சம்பள பாக்கி இருப்பதாகவும் பல செய்திகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இது குறித்து லோகேஷ் கனகராஜ் தரப்பில் எந்தவித சம்பள பாக்கியும் லோகேஷ் கனகராஜுக்கு இல்லை எனவும் லியோ படத்திற்கான சம்பளம் முழுவதையும் அவர் பெற்றுவிட்டார் எனவும் இந்த சர்ச்சையினால் லோகேஷ் கனகராஜ் மிகவும் அப்செட்டில் இருக்கிறார் எனவும் கூறப்படுகிறது. மேலும் இது சம்பந்தமாக பிரஸ் மீட் ஒன்றை ஏற்பாடு செய்து லோகேஷ் கனகராஜ் இதற்கு விளக்கம் அளிக்க உள்ளார் என்று தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. லியோ படத்திற்காக லோகேஷ் கனகராஜ் கிட்டத்தட்ட 22 கோடி ரூபாய் வரை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- Advertisement -