- Advertisement -
தமிழ் இயக்கும் புதிய திரைப்படம், பெருமாள் முருகனின் பூக்குழி நாவலை தழுவி உருவாகிறது.
மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தர்ஷனா ராஜேந்திரன். இருள், வைரஸ் ஆகிய படங்களில் அவர் நடித்துள்ளார். கடந்த ஆண்டு வெளியான ஹிருதயம் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையேயும் அவர் பிரபலமானார். தர்ஷனா என்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்தார். தமிழில், விஜய் சேதுபதியுடன் கவண் மற்றும் விஷாலின் இரும்புத்திரை திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார். அண்மையில் மலையாளத்தில் அவரது நடிப்பில் வெளியான ஜெய ஜெய ஜெய ஜெய ஹே என்ற திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இது தர்ஷனாவின் மார்க்கெட்டையும் உயர்த்தியது.

இதைத் தொடர்ந்து தெலுங்கிலும் அவர் அறிமுகமாகி உள்ளார். சினிமா பண்டி படத்தின் மூலம் அறிமுகமான பிரவீன் கந்த்ரேகுலா இயக்கத்தில் தனது முதல் தெலுங்குப் படத்தில் தர்ஷனா நடித்திருந்தார். மேலும் இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரனும் முக்கிய வேடத்தில் நடித்தார்.




