spot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைசென்னை கொரட்டூரில் 4 வது நாளாக மழைநீர் வெளியேற்றும் பணி

சென்னை கொரட்டூரில் 4 வது நாளாக மழைநீர் வெளியேற்றும் பணி

-

- Advertisement -

சென்னை கொரட்டூரில் பத்துக்கும் மேற்பட்ட தெருக்களில் 4 வது நாளாக மழைநீர் வெளியேற்றும் பணி தீவிரமாக நடைபெறுகிறது.

கொரட்டூரில் உள்ள இரயில்வே சாலை தெருக்களில் ஆயில் கலந்த சாக்கடை கழிவுகளை சுத்தம் செய்யும் பணிகளில் 100க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

we-r-hiring

3495 டிரான்ஸ்பார்மரில் இருந்து மின்சாரம் வழங்கப்பட்டு 7 பகுதியில் மின் இணைப்பு வழங்க பணிகள் நடைபெற்று வருகிறது.

அம்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு இடங்களில் புயல் பாதிப்பின் காரணமாக மழைநீர் தேங்கி பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது.

சென்னை கொரட்டூரில் பத்துக்கும் மேற்பட்ட தெருக்களில் 4 வது நாளாக மழைநீர் வெளியேற்றும் பணி தீவிரமாக நடைபெறுகிறது.

கொரட்டூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் சுமார் 5 அடிக்கு மேல் மழைநீர் தேங்கி நான்காவது நாளாக கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

குறிப்பாக கொரட்டூர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய பகுதியில் உள்ள 45 தெருகளில் பத்து தெருகளில் சுமார் 3 அடி அளவிற்கு தண்ணீர் தேங்கியுள்ள நிலையில் அதை வெளியேற்றும் பணியில் சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் சாமுவேல், வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் சாமுவேல், வார்டு உறுப்பினர்கள்

அம்பத்தூர் தொழிற்பேட்டையில் இருந்து வெளியேறிய தொழிற்சாலை கழிவுகள் முழுவதும் கொரட்டூர் வீட்டு வாரியத்திற்குள் உள்ள தெருக்களிலும் தேங்கியுள்ளது. தெருக்களில் உள்ள ஆயில் கலந்த சாக்கடை கழிவுகளையும் தூய்மை அகற்றும் பணியில் 100 க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் கொரட்டூர் முழுவதும் ஈடுபட்டு வருகிறார்கள்.

மீதமுள்ள 10 தெருகளில் மழை நீரை அகற்றும் பணியில் 8 ராட்சத மோட்டார் எந்திரங்களை வைத்து வெளியேற்றி வருகின்றனர்.மெல்ல மெல்ல வடிந்து வரும் மழை வெள்ள நீரில் மின்சார வாரிய ஊழியர்கள் மின் விநியோகத்தை துவக்கி உள்ளனர்.

அம்பத்தூர் தொகுதியில் உள்ள மொத்த 3495 டிரான்ஸ்பார்மரில் மின்சாரம் வழங்கப்பட்டது. மேலும் 7 பகுதியில் மின்சாரம் வழங்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

MUST READ