spot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்தில் திருமாவளவன் கைது

ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்தில் திருமாவளவன் கைது

-

- Advertisement -

சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு ஆளுநர் மாளிகையை முற்றுகையிட சென்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

Image

we-r-hiring

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “ஆளுநர் சட்டப்பேரவையில் நடந்துக் கொண்டது மட்டும் தான் பிரச்சனையா? இல்லை அவர் வந்த நாள் முதலே பிரச்சனை தான். அவர் வருவதற்கு முன் இருந்தே விசிக எச்சரித்து வருகிறது. ஆளுநர் ரவி தமிழகத்திற்கு வந்தால் சனாதன கருத்துக்களை திணிப்பார் என்று எச்சரித்தேன். நாகாலாந்து மக்கள் ரவியை வெளியேற்ற போராடியது போல தற்போது தமிழ்நாடு மக்கள் போராடும் நிலை ஏற்பட்டுள்ளது

ஆளுநர் ரவி தீவிரவாத ஆர்எஸ்எஸ் சிந்தனையாளர், அவருடைய அரசியலே சனாதனம் மட்டும்தான். அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கி தந்த புரட்சியாளர் அம்பேத்கர் பெயரை உச்சரிப்பதற்கு உனது நாக்கு கூசுகிறது என்றால் உங்களோடு எப்படி நாங்கள் அரசியல் செய்ய முடியும், எப்படி இணக்கமாக இருக்க முடியாது. இது வெறும் நிர்வாக சிக்கல் அல்ல, கொள்கை சிக்கல்.ஆளுநருக்கும், அரசுக்கும் இருக்கும் முரண்பாடு என்பது உறவு தொடர்பானது என்பதல்ல, அதிகாரம் தொடர்பானது.

arrest

ஆளுநராக நியமிக்கப்படுபவர் அரசியல்வாதியாக செயல்படக் கூடாது. ஆர்எஸ்எஸ் தொண்டராக செயல்படுவது அரசியலை விட ஆபத்தானது. ஆர் எஸ் எஸ் – ன் இறுதி இலக்கை செயல்படுத்த நியமிக்கப்பட்ட பயிற்சி பெற்ற ஆர் எஸ் எஸ் தொண்டர்தான் ஆர் என் ரவி. ஆளுநர்கள் மூலம் பிஜேபி அல்லாத மாநிலங்களில் நிர்வாக தேக்கத்தை கொண்டு வர முயற்சிக்கிறார்கள். இனி வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஆளுநர் இல்லாமலே நடத்த வேண்டும்.

திராவிட அரசியலை எதிர்க்கிறோம் என்ற பெயரில் அரசியல் புரிதல் இல்லாமல் சிலர் உளறுகிறார்கள். திராவிடம் என்பது சகோதரத்துவத்தை உயர்த்தி பிடிப்பது. சமத்துவத்தை, சமூக நீதியை பாதுகாத்து வரும் திராவிடத்தை குழித்தோண்டி புதைக்க பார்க்கிறார்கள்.திராவிட அரசியலை எதிர்ப்பது என்பது அம்பேத்கர், பெரியார், காரல் மார்க்ஸ் ஆகியோரின் அரசியலை எதிர்ப்பதாக தான் பொருள். திமுகவிற்காக ஆர்எஸ்எஸ்-ஐ எதிர்க்கவில்லை, இந்த மண்ணிற்காகவும் மக்களுக்காவும் தான் ஆர்எஸ்எஸ்- ஐ எதிர்க்கிறோம். ஆளுநரே, ஆர்.என்.ரவியே, ஆர்எஸ்எஸ் ரவியே….இந்த நாடு தமிழ்நாடு, இந்த நாடு சமூக நீதி நாடு, நீங்கள் யாருக்கு பதில் சொல்கிறீர்களோ? இல்லையோ? சிறுத்தைகளுக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் நிச்சயம் உருவாகும்” எனக் கூறினார்.

MUST READ