spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதென்காசி அருகே தமிழகம்- கேரளா எல்லையில் போக்குவரத்து நெரிசல்!

தென்காசி அருகே தமிழகம்- கேரளா எல்லையில் போக்குவரத்து நெரிசல்!

-

- Advertisement -

 

தென்காசி அருகே தமிழகம்- கேரளா எல்லையில் போக்குவரத்து நெரிசல்!
Video Crop Image

தென்காசி மாவட்டத்தில் தமிழகம்- கேரளா எல்லை பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

we-r-hiring

சீமான் மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை!

தென்காசி மற்றும் நெல்லை மாவட்டங்களில் இருந்து கேரளாவுக்கு காலை நேரத்தில் கனிமவளங்களை ஏற்றி கொண்டு லாரிகள் அதிகளவில் செல்வது வழக்கம். இந்த நிலையில், சபரிமலை செல்லும் பக்தர்களின் வாகனங்களும் அதிகளவில் வந்ததால் புளியரை பகுதியில், திருமங்கலம்- கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 960 உயர்வு!

சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றனர். சபரிமலை சீசன் காலத்தில் கூடுதலாக காவலர்களைப் பணியமர்த்தி போக்குவரத்தை சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.

MUST READ