spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுசீமான் மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை!

சீமான் மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை!

-

- Advertisement -

 

seeman

we-r-hiring

வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து நாம் தமிழர் கட்சியின் தலைவர் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

‘ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி திருக்கோயிலுக்கு உள்ளே தாக்குதல்’- ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2018- ஆம் ஆண்டு சென்னை தரமணியில் நடந்த தமிழர் எழுச்சி கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழீழம் பற்றியும், மணிப்பூர், நாகாலாந்து மாநிலங்களில் நிலவும் சூழல் குறித்து பேசினார். நியூட்ரினோ திட்டம், சென்னை- சேலம் 8 வழிச்சாலை ஆகியவைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துப் பேசினார்.

இரு பிரிவினருக்கு எதிராக மோதலை ஏற்படுத்தும் விதமாக சீமான் பேசியதாக தரமணி காவல்துறையினர் வழக்குப்பதிவுச் செய்திருந்தனர். அதைத் தொடர்ந்து, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி சீமான் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 960 உயர்வு!

இதை எதிர்த்து சீமான் தாக்கல் செய்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதி எம்.நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, சீமான் மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தும், விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்தும் உத்தரவிட்டார்.

MUST READ