spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு"சென்னையில் வரலாறு காணாத மழை"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

“சென்னையில் வரலாறு காணாத மழை”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

-

- Advertisement -

 

"சென்னையில் வரலாறு காணாத மழை"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
Photo: DMK

சென்னையில் நடந்த தி.மு.க. நிர்வாகி இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்டு பேசிய தி.மு.க.வின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், “சென்னையில் வரலாறு காணாத மழை பெய்துள்ளது. சென்னையில் 47 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை பெய்துள்ளது. இவ்வளவு பெரிய மழை, வெள்ளப் பாதிப்பு வரும் என்று எச்சரிக்கை எதுவும் தரப்படவில்லை. ஆட்சியில் இல்லாத போதும், கொரோனா காலத்தில் நிவாரண உதவிகளை தி.மு.க. வழங்கியது.

we-r-hiring

தென்காசி அருகே தமிழகம்- கேரளா எல்லையில் போக்குவரத்து நெரிசல்!

ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் களப்பணியில் ஈடுபடும் இயக்கம் தி.மு.க. கடந்த 2015-ல் செம்பரம்பாக்கம் ஏரி தண்ணீர் திறப்புக்கு அனுமதி கேட்க ஜெயலலிதாவிடம் அதிகாரிகள் பயந்தனர். செம்பரம்பாக்கம் ஏரி தண்ணீரை தொடர்ந்து கண்காணித்து சென்னையை காத்தது தி.மு.க. அரசு. சென்னையில் வெள்ளம் பாதித்த அனைவருக்கும் நிவாரணத் தொகை வழங்கப்படும்.

சீமான் மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை!

ஒருநாள் முழுவதும் மழை பெய்யும் என எச்சரிக்கை செய்யவில்லை. அ.தி.மு.க. ஆட்சியில் உதவிப் பொருள்களில் ஸ்டிக்கர் ஒட்டினர்” என்று குற்றம் சாட்டியுள்ளார்.

MUST READ