- Advertisement -
2023-ம் ஆண்டு பொங்கல் தினத்தை ஒட்டி விஜய் நடித்த வாரிசு திரைப்படம் வெளியானது. இத்திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இந்த படத்தை இயக்கியிருந்தார். படத்தில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்திருந்தார். சரத்குமார், யோகி பாபு, சங்கீதா, ஷ்யாம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
இதைத் தொடர்ந்து அண்மையில் ஆயுதபூஜை விடுமுறையை முன்னிட்டு பெரிய எதிர்பார்ப்புக்கு இடையே லியோ திரைப்படம் வௌியாது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த இத்திரைப்படத்தில் த்ரிஷா, அர்ஜூன், சஞ்சய் தத், சாண்டி, கௌதம் மேனன், மிஷ்கின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். படத்திற்கு அனிருத் இசை அமைத்திருந்தார். லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸில் (LCU) பாணியில் திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தது.




