
சென்னை மெட்ரோ ரயிலில் நாளை (டிச.17) 5 ரூபாயில் பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தனுஷின் D50…. ரிலீஸ் எப்போது தெரியுமா?
சென்னையில் மெட்ரோ நிறுவப்பட்ட நாளையொட்டி, கடந்த டிசம்பர் 03- ஆம் தேதி பயணிகள் 5 ரூபாய் கட்டணத்தில் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. ஆனால், மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட கனமழையால், அன்றைய தினம் விடுமுறை அறிவிக்கப்பட்டு பலரும் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டது.
இதனைக் கருத்தில் கொண்டு 5 ரூபாய் சலுகைக் கட்டண வாய்ப்பை நாளைக்கு (டிச.17) மெட்ரோ ரயில் நிர்வாகம் மாற்றியுள்ளது. வாட்ஸ் அப், ஃபோன் பே உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தி, டிக்கெட்டுகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும், மெட்ரோ நிறுவனத்தின் பயண அட்டை, சிங்கார சென்னை அட்டை ஆகிய பயணச் சீட்டுகளுக்கு இந்த சலுகை செல்லாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பான் இந்திய அளவில் வெளியாகும் யோகி பாபுவின் போட் …..டீசரை வெளியிடும் 5 ஹீரோக்கள்!
பயணிகளின் ஒட்டுமொத்த பயண அனுபவத்தை மேம்படுத்தவும், டிஜிட்டல் பயணச் சீட்டுகளை ஊக்குவிக்கவும், இந்த பிரத்யேக கட்டண சலுகை வழங்கப்படுவதாக மெட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
