- Advertisement -
சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகியிருக்கும் யாவரும் வல்லவரே திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னணி நடிகராக வலம் வருபவர் சமுத்திரக்கனி. தொடக்கத்தில் இயக்குநராக வலம் வந்த சமுத்திரக்கனி, தற்போது நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த அவர் ஹீராவாகவும் பல படங்களில் நடித்தார். தற்போது தெலுங்கு மொழியில் பல படங்களில் வில்லனாக நடித்து வருகிறார். மகேஷ் பாபு, அல்லு அர்ஜூன் உள்பட தெலுங்கின் உச்ச நட்சத்திரங்கள் நடிக்கும் படங்களில் சமுத்திரக்கனி வில்லன் வேடத்தில் நடிக்கிறார். தற்போது ஹரி இயக்கத்தில் விஷால் நடிக்கும் ரத்னவேல் படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து, அவர் நடித்துள்ள புதிய திரைப்படம் யாவரும் வல்லவரே.


சிபி சத்யராஜ் நடித்த வால்டர், சந்தானம் நடித்த பாரிஸ் ஜெயராஜ் உள்ளிட்ட வெற்றிப் படங்களை தந்தவர் 11:11 புரொடக்ஷன் பிரபு திலக். தற்போது N.A. ராஜேந்திர சக்ரவர்த்தி இயக்கத்தில் ‘யாவரும் வல்லவரே’என்ற திரைப்படத்தை வழங்க உள்ளார். இப்படத்தில் சமுத்திரக்கனி, யோகி பாபு இருவரும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து இருக்கின்றனர். இவர்களுடன் ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், ரமேஷ் திலக், இளவரசு, போஸ் வெங்கட், மயில்சாமி, ஜோ மல்லூரி, போஸ்டர் நந்த குமார், ரித்விகா, ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர். அறிமுக இயக்குநர் என்.ஏ.ராஜேந்திர சக்ரவர்த்தி இயக்கியுள்ளார். 4 வெவ்வேறு கதைகளை இணைத்துச் சொல்லும் வித்தியாசமான படமாக இது உருவாகியுள்ளது. ஒளிப்பதிவாளராக ஜெய்ஸ், இசையமைப்பாளராக என்.ஆர்.ரகுநந்தன் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.



