முதல்வர் எழுதிய கடிதத்தை உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பினார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு.
தமிழ்நாடு ஆளுநர் கடந்த ஜனவரி 9 ஆம் தேதி சட்டமன்றத்தில் நடந்துகொண்ட விதம் குறித்தும், தொடர்ந்து தமிழ் நாட்டு நலனுக்கு எதிராக அரசியல் சாசன விதிகளை மீறி செயல்பட்டுவருவது குறித்தும் குடியரசு தலைவருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதினார்.

சீலீட்ட கவருப் வழங்கப்பட்ட முதல்வரின் கடிதம் மற்றும் தமிழ் நாடு அரசின் கோரிக்கை மனு ஆகியவற்றை குடியரசுத் தலைவரின் குறிப்புடன் உள்துறை அமைச்சகத்திற்கு குடியரசுத் தலைவர் மாளிகை அனுப்பியுள்ளது.
கடந்த 9 ஆம் தேதி தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, சட்டப் பேரவை மாண்பையும், தேசிய கீதத்தை அவமதிக்கும் வகையில் அவை நடவடிக்கையில் இருந்து பாதியில் எழுந்து சென்றார்.

தமிழ்நாடு அரசின் கடிதம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடியரசுத் தலைவர் பரிந்துரைத்துள்ளதாக உள்துறை அமைச்சக அதிகாரிகள் தகவல்.
இந்த விவகாரத்தில் தமிழ்நாடு சட்ட அமைச்சர் ரகுபதி, திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி. ஆர் பாலு, ஆ. ராசா, வில்சன் மற்றும் என். ஆர் இளங்கோ ஆகியோர் நேற்று முன்தினம் குடியரசுத் தலைவர் சந்தித்து புகார் அளித்தனர்.
அப்போது, தமிழ்நாடு முதல்வர் எழுதிய கடிதத்தையும் சீலிட்ட கவரில் குடியரசுத் தலைவரிடம் வழங்கினர்.

தேசிய கீதத்தை அவமதிக்கும் வகையிலும், அரசியல் சாசனத்துக்கு எதிராகவும், சட்டப்பேரவை மாண்பை குலைக்கும் விதத்திலும் நடந்துகொண்ட தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகள் குழு குடியரசு தலைவரை நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு ஆளுநர் விவகாரம் குறித்து, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுடன் தமிழ்நாடு அரசு பிரதிநிதிகள் குழு, சட்ட அமைச்சர் ரகுபதி தலைமையில், தி.மு.க பொருளாளரும், நாடாளுமன்ற தி.மு.க குழு தலைவருமான டி.ஆர்.பாலு, ஆ.ராசா, பி.வில்சன், என்.ஆர்.இளங்கோ ஆகியோர் சந்தித்து கோரிக்கை மனுவையும், தமிழ்நாடு முதல்வர் எழுதிய கடிதத்தை சீலிட்ட கவரில் வழங்கினர்.
சுமார் 15 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பின் போது, தமிழ்நாடு சட்டப்பேரவையின் மாண்புக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும், தமிழ்நாடு மக்கள் அவமதிக்கும் வகையில் நடக்கும் ஆளுநரின் செயல்பாடுகள் குறித்து குடியரசுத் தலைவர் திரௌபதி மூர்முவிடம் விரிவாக எடுத்துரைத்தனர்.

குறிப்பாக கடந்த 9ம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் தமிழ்நாடு ஆளுநர் நடந்து கொண்ட விதம் அரசியல் சாசனத்துக்கு எதிரானது எனவும், சட்டப்பேரவையின் மாண்பை இழிவுபடுத்தியும், தேசிய கீதத்தை அவமதிக்கும் வகையிலும், ஆளுநர் எழுந்து சென்ற விதம் குறித்து தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகள் குழு விரிவாக எடுத்துரைத்துள்ளனர்.
குடியரசு தலைவருடனான சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய டி.ஆர்.பாலு,
தமிழ்நாடு முதலமைச்சர் அளித்த கடிதத்தை சட்ட அமைச்சர் ரகுபதி குடியரசு தலைவரிடம் வழங்கினார்.

இதன் பின்னர், தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் நடந்து கொண்ட விதம் அரசியலமைப்புக்கு எதிரானது என்றும், சட்ட சபையில் ஆளுநர் நடந்துகொண்ட விதம் மிக வருந்தத்தக்க விசயல் என்பதையும்,
தேசிய கீதம் ஒலிப்பதற்கு முன்னால் ஆளுநர் சட்டப்பேரவையில் வெளி நடப்பு செய்தது தேசிய கீதத்தை அவமதிக்கும் செயல் என்பதை எடுத்துரைத்ததாக கூறினார்.
அதேபோல, தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்து பின்னர் ஆளுநரும் ஒப்புதல் அளித்து கையெழுத்திட்ட அந்த உரையில் பலவற்றை தவிர்த்தும், சேர்த்தும் படித்துள்ளார்.
ஆளுனர் அரசியல் சாசனத்துக்கு எதிராகவும், சட்டப்பேரவை விதிமுதைகளுக்கு மாறாகவும் நடந்துகொண்டுள்ளார் என்பதையும் எடுத்துரைத்தோம்.
குடியரசுத் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் எழுதிய கடிதத்தைப் படித்துப் பார்த்த பின்னர் ஆளுனரின் அரசியல் சாசன விதி மீறல் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தினோம்.
இந்த விவகாரம் அனைத்தையும் கவனமுடன் கேட்டு பின்னர், உரிய நடவடிக்கை எடுப்பதாக (I Will see) குடியரசு தலைவர் உறுதியளித்துள்ளதாக டி.ஆர் பாலு தெரிவித்தார்.
பின்னர் சேது சமுத்திர திட்டம் குறித்த கேள்விக்கு பதிலளித்த பாலு, “மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் நாடாளுமன்றத்தில் வழங்கிய பதில் அடிப்படையில் சேது சமுத்திரத் திட்டம் நிச்சயமாக நிறைவேற்ற வேண்டும் என மத்திய அரசிடம் வலியுறுத்துவோம்.

சேது சமுத்திர திட்டத்தை நடைமுறைபடுத்த அனைத்து முயற்சிகளையும் எடுப்போம் எனவும், நாடாளுமன்றத்திலும் இதுகுறித்து வலியுறுத்தபடும் என தெரிவித்தார்.
