Homeசெய்திகள்சினிமாவிஜய்சேதுபதி, கத்ரினாவின் கலக்கல் காமினேஷன்... முன்னோட்டம் வௌியானது...

விஜய்சேதுபதி, கத்ரினாவின் கலக்கல் காமினேஷன்… முன்னோட்டம் வௌியானது…

-

- Advertisement -
விஜய் சேதுபதி மற்றும் கத்ரினா கைஃப் நடிப்பில் உருவாகியுள்ள மெரி கிறிஸ்துமஸ் படத்தின் முன்னோட்டம் வெளியாகி உள்ளது.

தமிழ் திரையுலகில் ஹீரோ, வில்லன், குணச்சித்திரம் என அனைத்து கதாபாத்திரங்களிலும் அசத்தி உச்ச நட்சத்திரமாக உயர்ந்து இருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. தமிழில் கொடி நாட்டிய அவர் தற்போது தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் அசத்தி வருகிறார். இதையடுத்து மும்பை கர் அதாவது மாநகரம் படத்தின் இந்தி ரீமேக் மூலம் பாலிவுட்டிலும் அறிமுகமாகினார் விஜய் சேதுபதி. இருப்பினும் அப்படம் பெரியளவில் கவனம் ஈர்க்கவில்லை. இயைடுத்து அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த ஜவான் படத்தில் பாலிவுட் ஜாம்பவானுக்கு வில்லனாக நடித்ததன் மூலம் ஹிந்தி திரையுலகில் தனக்கான இடத்தை இறுக்கமாக பிடித்துக் கொண்டார் விஜய் சேதுபதி.

we-r-hiring
தற்போது, கேத்தரினா கைஃப், விஜய் சேதுபதி பிரதான வேடங்களில் நடித்திருக்கும் ‘மெரி கிறிஸ்துமஸ்’ திரைப்படம் ஹிந்தி மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் தயாராகி இருக்கிறது. ரமேஷ், துரானி, சஞ்சய் ரவ்ட்ராய், ஜெயா துரானி மற்றும் கேவல் கார்க் ஆகியோர் இப்படத்தை இணைந்து தயாரித்து உள்ளார். ஸ்ரீராம் ராகவன் படத்தை இயக்கி இருக்கிறார். விநாயகர் பிரதிமா கண்ணன் மற்றும் டினு ஆனந்த் ஆகியோரும் நடித்து உள்ளனர். இது தவிர தமிழ் பதிப்பில் ராதிகா சரத்குமார், சண்முகராஜா, கவின் ஜெபாபு, ராஜேஷ் வில்லயம்ஸ் ஆகியோரும் நடித்து உள்ளனர். ராதிகா ஆப்தே மற்றும் அஸ்வின் கலாசேகர் ஆகியோர் இந்தி மற்றும் தமிழ் இரு மொழிகளிலும் நடித்துள்ளார்.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மெரி கிறிஸ்துமஸ் படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி உள்ளது. இத்திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

MUST READ