லியோ படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு விஜய் தனது 68வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். வெங்கட் பிரபு இயக்கி வரும் இப்படத்திற்கு தற்காலிகமாக தளபதி 68 என்ற தலைப்பிடப்பட்டுள்ளது. இதில் விஜயுடன் இணைந்து பிரசாந்த், பிரபுதேவா, லைலா, மைக் மோகன், சினேகா மற்றும் பலர் நடிக்கின்றனர். ஏ ஜி எஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். விஜய் இதில் அப்பா-மகன் என இரு வேடங்களில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும்இந்த படம் தொடர்பாக வெளியாகும் அனைத்து அப்டேட்டுகளையும் ரசிகர்கள் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.
அதன்படி சமீபத்தில் இந்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு டிசம்பர் 31 அன்று மாலை வெளியிட பட குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தெரியவந்தது. அதுவும் புத்தாண்டு தின ட்ரீட்டாக மூன்று போஸ்டர்களை வெளியிட இருப்பதாகவும் செய்திகள் வெளியானது. அதைத் தொடர்ந்து பான் இந்தியா படமாக இப்படம் உருவாக இருப்பதால் பாஸ் என்று ஆங்கிலத்தில் தலைப்பு வைக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் இந்த படத்திற்கு G.O.A.T (Greatest of All Time) என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும் இது சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்துமா என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
- Advertisement -