spot_imgspot_imgspot_imgspot_img
HomeGeneralகொடைக்கானலில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களுக்கும் ஒரே நுழைவு சீட்டு முறை

கொடைக்கானலில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களுக்கும் ஒரே நுழைவு சீட்டு முறை

-

- Advertisement -

கொடைக்கானலில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்களுக்கும் ஒரு நுழைவு சீட்டு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

kodaikanal guna

we-r-hiring

மலைகளின் இளவரசன் என்று அழைக்கப்படும் கொடைக்கானல் உலகளாவிய சுற்றுலாத்தலமாகும். பல்வேறு இடங்களில் இருந்து பல லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு இயற்கை காட்சிகளை காண வருகிறார்கள். குறிப்பாக முக்கிய சுற்றுலா தளங்கள் அனைத்துமே வனத்துறை கட்டுப்பாட்டில் இருக்கிறது மோயர் சதுக்கம், குணா குகை, தூண் பாறை உள்ளிட்ட சுற்றுலாத்தலங்கள் அதிக சுற்றுலா பயணிகள் செல்லும் இடமாக இருக்கிறது. இதில் மோயர் சதுக்கம், குணா குகை , தூண் பாறை ஆகிய பகுதிகளில் தனித்தனியாக நுழைவு கட்டணம் வசூல் செய்து பெரியோர்களுக்கு 25 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது இந்த நுழைவு கட்டணம் ஒரே நுழைவுச்சீட்டு ஆக மாற்றப்பட்டுள்ளது.

ஒரு இடத்தில் நுழைவு சீட்டு பெற்றால் மீதமுள்ள இடங்களுக்கு செல்லலாம் . இதில் பெரியவர்களுக்கு 30 ரூபாய் எனவும், சிறியவர்களுக்கு 15 ரூபாய் எனவும் கேமராவுக்கு 50 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு எந்த ஒரு முன்னறிவிப்பும் இல்லாமல் வனத்துறை சார்பாக அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு சுற்றுலா தொழிலை நம்பியுள்ள சுற்றுலா வாகன ஓட்டிகள், வேன் வாகன ஓட்டுனர்கள் உள்ளிட்டோர் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். மேலும் ஒரே நுழைவு கட்டண முறையை ரத்து செய்து மீண்டும் பழைய முறையை தொடர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

MUST READ