spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாவேட்டையன் படப்பிடிப்பு ரத்து..... விஜயகாந்த் உடலுக்கு மரியாதை செலுத்த சென்னை திரும்பும் ரஜினி!

வேட்டையன் படப்பிடிப்பு ரத்து….. விஜயகாந்த் உடலுக்கு மரியாதை செலுத்த சென்னை திரும்பும் ரஜினி!

-

- Advertisement -

விஜயகாந்த் இறுதி சடங்கில் கலந்து கொள்ள நடிகர் ரஜினி சென்னை திரும்புகிறார்.வேட்டையன் படப்பிடிப்பு ரத்து..... விஜயகாந்த்தின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள சென்னை திரும்பும் ரஜினி!

நடிகர் விஜயகாந்த் சினிமாவை மட்டுமல்லாமல் அரசியலையும் ஒரு கை பார்த்தவர். அதன்படி சினிமாவிலும் அரசியலும் தடம் பதித்தவர்களில் மிக முக்கியமானவர் விஜயகாந்த். இவர் தமிழ் சினிமாவின் 80 காலகட்டங்களில் ரஜினி, கமல் ஆகியோருக்கு இணையாக பல வெற்றி படங்களை கொடுத்தவர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த சில படங்கள் எதிர்பார்த்த அளவில் வெற்றி பெறாத போதிலும் விஜயகாந்தின் நானே ராஜா நானே மந்திரி, அம்மன் கோயில் கிழக்காலே போன்ற படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதிலும் விஜயகாந்தின் நூறாவது படமான கேப்டன் பிரபாகரன் திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது.

we-r-hiring

இவ்வாறு திரைத்துறையில் கம்பீரமாக தோற்றமளித்த விஜயகாந்த் கலந்த சில வருடங்களாக உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தார். அதன்படி கடந்த நவம்பர் மாதத்தில் மருத்துவமனையில் தொண்டை வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட விஜயகாந்த் 20 நாட்கள் வரை மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்று வந்தார். வேட்டையன் படப்பிடிப்பு ரத்து..... விஜயகாந்த்தின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள சென்னை திரும்பும் ரஜினி!அதன்பின் பூரண குணமடைந்து டிசம்பர் 12-ல் வீடு திரும்பிய விஜயகாந்த் மீண்டும் மருத்துவமனையில் நேற்றைய முன் தினம் அனுமதிக்கப்பட்டார். இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் வென்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தேமுதிக நிர்வாகத்தின் சார்பில் அறிவிப்பு வெளியானது. அதன் பின் சில மணி நேரங்களில் விஜயகாந்த் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது.

இந்த செய்தி விஜயகாந்தின் குடும்பத்தினரை மட்டுமல்லாமல் விஜயகாந்தின் தொண்டர்கள் ரசிகர்கள் என பலரையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. விஜயகாந்தின் மறைவிற்கு பல்வேறு விஜயகாந்தின் மறைவிற்கு பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் என பலரும் தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். அத்துடன் திரைப்பட பிரபலங்கள் பலரும் நேரில் சென்று மரியாதை செலுத்தியும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்தும் பதிவிட்டு வருகின்றனர்.வேட்டையன் படப்பிடிப்பு ரத்து..... விஜயகாந்த்தின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள சென்னை திரும்பும் ரஜினி!

அதே சமயம் நடிகர் ரஜினிகாந்த் தனது 170 வது படமான வேட்டையன் திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் நாகர்கோவில் பகுதிகளில் நடைபெற்று வருகிறது. தற்போது விஜயகாந்த் மறைந்த தகவல் அறிந்த ரஜினி, விஜயகாந்த் விஜயகாந்த் உடலுக்கு மரியாதை செலுத்த
படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு சென்னை திரும்புகிறார் என்று தகவல் கிடைத்துள்ளது.

MUST READ