spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாவிஜயகாந்த் மறைவு... சென்னையில் மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சி ரத்து -பா ரஞ்சித் அறிவிப்பு

விஜயகாந்த் மறைவு… சென்னையில் மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சி ரத்து -பா ரஞ்சித் அறிவிப்பு

-

- Advertisement -
கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மறைவையொட்டி சென்னையில் இன்று நடக்கவிருந்த ‘மார்கழியில் மக்களிசை’ நிகழ்ச்சி ஒத்திவைக்கப்படுகிறது.

தேமுதிக நிறுவனத் தலைவரும், நடிகருமான விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார். அவருக்கு வயது 71. அவரது மறைவால் தேமுதிக கட்சித் தொண்டர்கள், திரை ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். விஜயகாந்த் இல்லத்தில் உள்ள தேமுதிக கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது. அவரது மறைவு தொடர்பாக மியாட் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், நிமோனியா காரணமாக அனுமதிக்கப்பட்டு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்றுவந்த விஜயகாந்த்துக்கு மருத்துவப் பணியாளர்களின் கடின முயற்சி இருந்தபோதிலும் காலமானார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது மறைவு செய்தி அறிந்ததும் ஏராளமான தொண்டர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுது அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இயக்குநர் பா ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் நடைபெறும் மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. நடிகர் விஜயகாந்தின் மறைவு காரணமாக, அஞ்சலி செலுத்தும் விதமாக நிகழ்ச்சியை ஒத்திவைப்பதாக இயக்குநர் பா ரஞ்சித் தெரிவித்துள்ளார். சென்னை சாந்தோம் உயர்நிலைப் பள்ளியில் இன்று மதியம் இந்த நிகழ்ச்சி நடைபெற இருந்தது.

MUST READ