- Advertisement -

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியைச் சந்தித்தார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
“1,000 கோடி மதிப்பில் நிவாரணத் தொகுப்பு”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (டிச.30) மாலை 05.00 மணிக்கு நேரில் சந்தித்துப் பேசினார். உச்சநீதிமன்ற அறிவுறுத்தலை அடுத்து ஆளுநர் அழைப்பு விடுத்திருந்த நிலையில், ஆளுநரை முதலமைச்சர் சந்தித்து வருகிறார்.
இந்த சந்திப்பின் போது, அமைச்சர்கள் துரைமுருகன், தங்கம் தென்னரசு, ரகுபதி, ராஜகண்ணப்பன் ஆகியோர் முதலமைச்சருடன் உடனிருந்தனர். நிலுவையில் உள்ள மசோதாக்கள் தொடர்பாக ஆளுநருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.