

தமிழகத்தில் இருவேறு பகுதிகளில் நிகழ்ந்த விபத்துகளில் சிறுமி உள்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
உத்தரபிரதேசத்தில் இருந்து ராமேஸ்வரம் வந்த 20 சுற்றுலாப் பயணிகள் வேன் மூலம் கன்னியாகுமரிக்குச் சென்றுக் கொண்டிருந்தனர். தூத்துக்குடி- நெல்லை சாலையில் வல்லநாடு வந்த போது, எதிரே வந்த மணல் லாரி, வேன் மோதியதில் இரண்டு பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சிறுமி உயிரிழந்த நிலையில், மீதமுள்ளவர்கள் பலத்த காயங்களுடன் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் இருவேறு பகுதிகளில் சாலை விபத்து- 5 பேர் உயிரிழப்பு!
இதேபோல், கள்ளக்குறிச்சி அருகே சொகுசு பேருந்தும், கோழிகளை ஏற்றி வந்த வாகனமும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர். காயமடைந்த ஏழு பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சொகுசு பேருந்தில் இருந்த மற்றவர்கள், மாற்றுப் பேருந்தின் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.


