spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியா"கடந்த ஐந்து ஆண்டுகளில் யுபிஐ பரிவர்த்தனை 147% அதிகம்"- ரிசர்வ் வங்கி தகவல்!

“கடந்த ஐந்து ஆண்டுகளில் யுபிஐ பரிவர்த்தனை 147% அதிகம்”- ரிசர்வ் வங்கி தகவல்!

-

- Advertisement -

 

யுபிஐ-ல் தினமும் ரூ. 5 லட்சம் வரை பணம் அனுப்பலாம் - ஆர்பிஐ அறிவிப்பு..

we-r-hiring

இந்தியாவில் கடந்த ஐந்து ஆண்டுகளில் யுபிஐ பரிவர்த்தனை 147% உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அஜ்மல் படத்திற்கு தடை விதித்த நீதிமன்றம்… இதுதான் காரணமா…

நொடி பொழுதில் டிஜிட்டல் முறையில் பரிவர்த்தனை நடைபெறுவதால் சாமானியர்கள், வியாபாரிகள் என அனைத்து தரப்பினரிடையே யுபிஐ பரிவர்த்தனை முக்கிய பங்காற்றுகிறது. நகரம் முதல் கிராமம் வரை யுபிஐ பரிவர்த்தனை செயல்பாட்டில் உள்ள நிலையில், ரொக்கத்தின் பயன்பாடு வெகுவாகக் குறைந்துள்ளது. கூகுள் பே, பேடிஎம் என யுபிஐ பரிவர்த்தனை மேற்கொள்ள பல்வேறு மொபைல் செயலிகள் பயன்பாட்டில் உள்ளன.

இந்த நிலையில், கடந்த 2022- 23 ஆம் நிதியாண்டில் 8,375 கோடி பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன. இது கடந்த 2017- 2018 ஆம் நிதியாண்டில் 92 கோடி யுபிஐ பரிவர்த்தனைகளாக இருந்திருக்கிறது. இதனால் யுபிஐ பரிவர்த்தனை கடந்த ஐந்து ஆண்டுகளில் 147% அதிகரித்திருப்பதாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடைசிவரை கேப்டனை வந்து பார்க்காத வடிவேலு! இருவருக்கும் என்னதான் பிரச்சனை?

கடந்த 2017- ஆம் நிதியாண்டில் யுபிஐ பரிவர்த்தனை மூலம் ஒருலட்சம் கோடி ரூபாய் பணப்பரிமாற்றம் நடைபெற்றுள்ளதாகவும், இது 2022- ஆம் நிதியாண்டில் 139 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்திருப்பதாகவும் ரிசர்வ் வங்கித் தெரிவித்துள்ளது.

கல்வி நிலையங்கள், மருத்துவமனைகளில் யுபிஐ பரிவர்த்தனை தொகையை ஒரு லட்சத்தில் இருந்து ஐந்து லட்சம் ரூபாயாக உயர்த்தி ரிசர்வ் வங்கி அண்மையில் அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ