- Advertisement -
தேமுதிக கட்சியின் தலைவரும் நடிகருமான விஜயகாந்த் உயிரிழந்ததை அடுத்து, நடிகர் வடிவேலு அவரை நேரில் வந்து பார்க்காதது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

நடிகரும், தேமுதிக கட்சியின் தலைவருமான விஜயகாந்த், உடல் நலக்கோளாறு காரணமாக உயிரிழந்தார். இவரது உடலுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவ்டடங்களில் இருந்து பல லட்சம் பேர் திரண்டு வந்துள்ளனர். திரையுலகினர் அரசியல் பிரபலங்கள் என பலர் தேமுதிக அலுவலகத்திலும், தீவுத்திடலிலும் வந்து விஜயகாந்திற்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். ஆனால், நகைச்சுவை நடிகர் வடிவேலு விஜயகாந்தின் உடலுக்கு மரியாதை செலுத்த வரவில்லை.


நகைச்சுவை நடிகர் வடிவேலும், விஜயகாந்தும் மதுரையிலிருந்து வந்தவர்கள். இருவருமே சின்னகவுண்டர், தவசி, எங்கள் அண்ணா, வல்லரசு, நரசிம்மா ஆகிய படங்களில் ஒன்றாக இணைந்து நடித்துள்ளனர். வடிவேலுவிற்கு சில படங்களில் நடிக்க அவர் வாய்ப்பு கேட்டு கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இப்படி இருக்கும்போது, 2011-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தின்போது, விஜயகாந்தை கடுமையாக தாக்கி பேசினார். வடிவுலே ஒற்றுமையாக இருந்தபோது அவர்களுக்குள் ஏற்பட்ட சின்ன மனஸ்தாபம், திமுகவினரால் உபயோகப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. வடிவேலுவின் ஆரம்ப கட்ட சினிமா வாழ்வின்போது, உடன் இருந்த விஜயகாந்தையே இப்படி பேசிவிட்டாரே என ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது.



