நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான “ஜெயிலர்” 605 கோடிக்கு மேல் வசூலித்து பாக்ஸ் ஆபிஸில் அடித்து நொறுக்கி சம்பவம் செய்தது. அதைத்தொடர்ந்து ரஜினியின் 170 ஆவது படமாக உருவாகி வரும் “வேட்டையன்” படத்தை ஜெய் பீம் பட இயக்குனர் டி.ஜே.ஞானவேல் இயக்கி வருகிறார். சமீபத்தில் ரஜினியின் பிறந்தநாளன்று படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதற்கிடையில் தலைவர் 171 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார். இப்படத்தின் அதிகாரப் பூர்வ அறிவிப்பு ஏற்கனவே வெளியாகி 2024 ஏப்ரல் மாதத்தில் படப்பிடிப்புகள் தொடங்குவதற்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில் ரஜினி 172 படமாக “ஜெயிலர் 2” படத்தில் தான் நடிக்கப் போகிறார் என செய்திகள் ஏற்கனவே வெளியாகின. ஆனால் ரஜினியின் 172வது படத்தை இயக்கப் போவது மாரி செல்வராஜ் என்று தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. எதிர்பாராத காம்போவாக உருவாகியுள்ள இந்தக் கூட்டணி குறித்த தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. பரியேறும் பெருமாள் என்ற தரமான படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான மாரி செல்வராஜ் அடுத்து தனுஷை வைத்து இயக்கிய கர்ணன் திரைப்படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்ததோடு விமர்சகர்கள் மத்தியிலும் பாராட்டைப் பெற்றது.
அதைத்தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் மற்றும் வடிவேலு,பகத் பாஸில் ஆகியோரின் நடிப்பில் வெளியான மாமன்னன் திரைப்படமும் விமர்சன ரீதியிலும் வசூல் ரீதியிலும் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. மேலும் மாரி செல்வராஜ் இயக்கும் படங்களில் ஒரு சோசியல் மெசேஜை மிக அழுத்தமாகப் பதிவு செய்வார். இந்நிலையில் ரஜினியுடன் இணைந்துள்ள தலைவர் 172 படத்திலும், ஆழமான சமூக கருத்து இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- Advertisement -


