spot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைமாணவர்களுக்கான வர்ணஜாலம் ஓவிய போட்டி

மாணவர்களுக்கான வர்ணஜாலம் ஓவிய போட்டி

-

- Advertisement -

மாணவர்களுக்கான வர்ணஜாலம் ஓவிய போட்டி நேற்று சிறப்பான முறையில் நடைபெற்றது மாணவர்கள் தங்களது திறமையையும் ஆர்வத்தையும் வெளிப்படுத்தி மகிழ்ந்தனர்

மாணவர்களுக்கான வர்ணஜாலம் ஓவிய போட்டி

சூரியன் எப்எம் சார்பில் சூரப்பட்டு வேலம்மாள் பள்ளியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் விஸ்வரூபம், கேஜிஎஃப், ஜெய்லர், தங்கலான் போன்ற திரைப்படங்களுக்கு கலை இயக்குனர்களாக பணியாற்றியவர்கள் நடுவர்களாக இருந்து மாணவர்களுக்கு பரிசளித்தனர்.

we-r-hiring

அம்பத்தூர் அடுத்து சூரப்பட்டு பகுதியில் அமைந்துள்ள வேலம்மாள் வித்யாஷ்ரம் சிபிஎஸ்சி பள்ளியில் சூரியன் எப்எம் சார்பில் வர்ணஜாலம் என்ற மெகா ஓவியப்போட்டி மிக சிறப்பாக நடைபெற்றது. இப்போட்டியானது பள்ளி மாணவர்களின் தனித்திறமையை வெளிக்கொண்டு வரும் நோக்கில் சூரியன் எப்எம் தொடர்ந்து இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

மாணவர்களுக்கான வர்ணஜாலம் ஓவிய போட்டி இப்போட்டிக்கு நுழைவு கட்டணம் ஏதும் இல்லாமல் முற்றிலும் இலவசமாக அனைத்து தரப்பு பள்ளி மாணவ மாணவிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு ஆவடி அம்பத்தூர் மாதவரம் செங்குன்றம் போன்ற பல பகுதிகளில் இருந்து பள்ளி மாணவர்கள் 1000-த்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பான முறையில் தனது ஓவியத்திறமைகளை மாணவர்கள் வெளிப்படுத்தினார்கள்.

மாணவர்களுக்கான வர்ணஜாலம் ஓவிய போட்டி இந்தப் போட்டியானது ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு கார்ட்டூன் தலைப்புகள், இரண்டு முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மரங்களை காப்போம் என்ற தலைப்பிலும், ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு எனது விடுமுறை காலம் என்ற தலைப்பிலும், ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆழ்கடல் அதிசயம் போன்ற தலைப்புகளும் கொடுக்கப்பட்டு போட்டி நடைபெற்றது.

மாணவர்களுக்கான வர்ணஜாலம் ஓவிய போட்டி இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக திரைப்பட கலை இயக்குனர்கள் ஸ்ரீதர், இளையராஜா, கிரண், மூர்த்தி, ஆகியோர் கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கி சிறப்பித்தனர்.

பரிசுகளை பெற்ற மாணவர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் தாங்கள் இந்த போட்டியில் கலந்து கொண்டது தங்களுக்கு ஒரு அரிய வாய்ப்பாகவும், மற்றும் புதிய அனுபவமாகவும், பரிசு பெற்றது மிகவும் மகிழ்ச்சி எனவும் தெரிவித்தனர்.

மாணவர்களுக்கான வர்ணஜாலம் ஓவிய போட்டி

MUST READ