spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஇந்துகளுக்கு எதிரான கருத்துகளை பரப்பும் அன்னபூரணி... நெட்பிளிக்ஸை தடை செய்ய வலியுறுத்தல்...

இந்துகளுக்கு எதிரான கருத்துகளை பரப்பும் அன்னபூரணி… நெட்பிளிக்ஸை தடை செய்ய வலியுறுத்தல்…

-

- Advertisement -
நயன்தாரா நடிப்பில் வௌியான அன்னபூரணி திரைப்படம் இந்துக்களுக்கு எதிரான கருத்துகளை பரப்புவதாக கூறி, படத்தையும் படத்தை ஒளிபரப்பு செய்யும் நெட்பிளிக்ஸ் தளத்தையும் தடை செய்யக்கோரி சமூக வலைதளங்களில் எதிர்ப்புகள் வலுக்கின்றன.

கோலிவுட்டின் லேடி சூப்பர்ஸ்டாராக கொண்டாடப்படுபவர் நயன்தாரா. இவர் பாலிவுட்டில் ஷாருக்கானுடன் இணைந்து ஜவான் படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படம் மூலம் அவர் பாலிவுட் திரையுலகிலும் தடம் பதித்தார். இதைத் தொடர்ந்து தமிழில் இறைவன் படத்தில் நடித்திருந்தார். அடுத்ததாக, ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் கதாநாயகியை மையமாகக் கொண்ட அன்னபூரணி படத்தில் நடித்தார். அறிமுக இயக்குநர் நீலேஷ் கிருஷ்ணா இந்தப் படத்தை இயக்கி உள்ளார். இப்படத்தை ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் மற்றும் நாட் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்து உள்ளன. இந்த படத்தில் நயன்தாராவுடன் இணைந்து ஜெய் மற்றும் சத்யராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருக்கின்றனர்.

we-r-hiring
இத்திரைப்படம் கடந்த டிசம்பர் மாதம் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இத்திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றாலும் அதே சமயம் கலவையான விமர்சனங்கைளும் பெற்றது. மேலும் விமர்சன ரீதியாக படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. இதைத் தொடர்ந்து இத்திரைப்படம் நெட்பிளிக்ஸ் தளத்தில் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.

அன்னபூரணி திரைப்படம் தமிழில் வரவேற்பை பெற்றாலும், வட இந்தியாவில் பெரும் எதிர்ப்பை சம்பாதித்து வருகிறது. இத்திரைப்படம் இந்துகளுக்கு எதிரானது என்றும், இந்துக்களின் மத உணர்வை புண்படுத்துவதாகவும் கூறப்படுகிறது. பிராமின் பெண் அசைவத்தை விரும்புவதும், பிரியாணி உணவை நமாஸ் செய்து தயாரிக்கும் காட்சிகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கின்றன. இது தொடர்பாக மும்பையில் ஏற்கனவே நயனின் அன்னபூரணி படத்தின் மீது வழக்கு பதியப்பட்டது. இந்நிலையில், அன்னபூரணி படத்தை வெளியிட்டுள்ள நெட்பிளிக்ஸ் தளத்தையும் தடை செய்யக்கோரி தற்போது எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன.

MUST READ