spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு"அரசு பேசசுவார்த்தைக்கு அழைக்கவில்லை"- சவுந்தரராஜன் பேட்டி!

“அரசு பேசசுவார்த்தைக்கு அழைக்கவில்லை”- சவுந்தரராஜன் பேட்டி!

-

- Advertisement -

 

"அரசு பேசசுவார்த்தைக்கு அழைக்கவில்லை"- சவுந்தரராஜன் பேட்டி!

we-r-hiring

ஊதிய உயர்வு, அகவிலைப்படி உயர்வு, நிலுவைத்தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்களான சி.ஐ.டி.யு., அண்ணா தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் இரண்டாவது நாளாக தமிழகம் முழுவதும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

செங்கல்பட்டு – திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க வேண்டும் – டாக்டர் ராமதாஸ்!

எனினும், தமிழகம் முழுவதும் அரசுப் பேருந்து சேவைகள் வழக்கம் போல் இயங்கி வருகிறது. ஒரு சில மாவட்டங்களில் தற்காலிக ஓட்டுநர்களைக் கொண்டு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், போராட்டத்தைத் தீவிரப்படுத்தியுள்ள தொழிற்சங்கத்தினர், தமிழகம் முழுவதும் உள்ள பேருந்து பணிமனைகளை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில், சென்னை பல்லவன் இல்லத்தை முற்றுகையிட்டு சி.ஐ.டி.யு. உள்ளிட்ட போக்குவரத்துத் தொழிற்சங்கத்தினர் போராட்டம் நடத்தினர்.

அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தின் சவுந்தரராஜன், “அரசு ஏற்பாடு செய்த அனுபவமில்லாத தற்காலிக ஓட்டுநர்களால் விபத்துகள் நேரிடுகிறது. தமிழக அரசு எங்களை இதுவரை பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை. அரசுதான் எங்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும்; நாங்கள் எப்படி அழைக்க முடியும்? பேச்சுவார்த்தைக்கு தயார் என்கிறார் அமைச்சர்; ஆனால் எங்களுக்கு அழைப்பு வரவில்லை.

போக்குவரத்துத் தொழிற்சங்கத்தினர் 2ஆவது நாளாக வேலை நிறுத்தம்!

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் அதையும் எதிர்கொள்வோம். போராட்டம் தோல்வி எனில் வெளி ஆட்களை ஏன் ஓட்டுநர்களாக நியமிக்க வேண்டும்?” என்று அரசுக்கு கேள்வி எழுப்பினார்.

MUST READ