spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாபிருத்விராஜின் தி கோட் லைஃப்... வெளியானது முதல் தோற்றம்...

பிருத்விராஜின் தி கோட் லைஃப்… வெளியானது முதல் தோற்றம்…

-

- Advertisement -
பிருத்விராஜ் நடிப்பில் உருவாகி இருக்கும் தி கோட் லைஃப் படத்தின் முதல் தோற்றம் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.

மோலிவுட் திரையுலகின் டாப் நடிகராக வலம் வருபவர் நடிகர் பிருத்விராஜ். நடிகராக மட்டுமன்றி வில்லன் கதாபாத்திரங்களில் பிருத்விராஜ் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். முதலில் மலையாளப் படங்களில் வில்லன் வேடத்தில் நடித்த அவர் அடுத்து தெலுங்கு படமான சலார் திரைப்படத்தில் பிரபாஸூக்கு வில்லனாக நடித்தார். இதில், பிருத்வியின் நடிப்பு வெகுவாகப் பாராட்டப்பட்டது. இதனிடையே நடிப்பை தவிர இயக்கத்திலும் பிருத்விராஜ் ஆர்வம் காட்டி வருகிறார். மோகன்லாலை வைத்து லூசிபர் படத்தின் இயக்குநராக அறிமுகமான அவர், அப்படம் ஹிட் அடித்ததை தொடர்ந்து அடுத்து லூசிபர் 2-ம் பாகத்தை இயக்கி வருகிறார். அதில் மோகன்லால் நாயகனாக நடிக்கிறார்.

we-r-hiring
இதனிடையே பிருத்விராஜ் நடித்து பல நாட்களாக கிடப்பில் உள்ள திரைப்படம் ஆடு ஜீவிதம். அரபு நாட்டுக்கு வேலை செல்லும் கதாநாயகன் அங்கு ஆடு மேய்க்க விடப்பட்டு பாலைவனத்தில் மாட்டிக்கொள்கிறான். அங்கிருந்து எப்படி தப்பிக்கிறான் என்பது தான் கதை. பிரபல எழுத்தாளர்‌ பென்‌ யாமின்‌ எழுதிய நாவலை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகியிருக்கிறது. ப்ளஸ்ஸி இந்தப் படத்தை இயக்கியுள்ளார். படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்து இருக்கிறார்.

இப்படத்தின் முதல் தோற்றத்தை தற்போது படக்குழு சமூகவலைதளங்களில் பகிர்ந்துள்ளது. இது டிரெண்டாகி வருகிறது. ஆடு ஜீவிதம் திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

MUST READ