spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாபிரபல திரைப்பட இயக்குநர் கோவையில் திடீர் மறைவு

பிரபல திரைப்பட இயக்குநர் கோவையில் திடீர் மறைவு

-

- Advertisement -
பிரபல மலையாள திரைப்பட இயக்குநர் வினு, உடல் நலக்குறைவு காரணமாக கோவை மாவட்டத்தில் இன்று திடீரென உயிரிழந்தார்.

 

we-r-hiring
மலையாளத்தில் பிரபல இயக்குநராக வலம் வந்தவர் வினு. அவருக்கு வயது 73. மலையாள பட இயக்குநராக இருந்தாலும், அவர் திரை உலகிற்கு வருவதற்கு முன்பாக கோவை சிங்காநல்லூர் பகுதியில் பல நாட்களாக வசித்து வந்துள்ளார். கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் வினு. இவர் சுரேஷ் என்பவருடன் இணைந்து தான் படங்களை இயக்கி வந்தார். இருவரும் சேர்ந்தே பல படங்களை இயக்கி இருக்கின்றனர். அதில் பெரும்பாலானவை மலையாளத்தில் பெரிய ஹிட் அடித்துள்ளன. அது மட்டுமன்றி, அவர்கள் இயக்கி குஷ்ருதி காற்று, மங்களம் வீட்டில் மனசேஸ்வரி குப்தா, ஆயுஷ்மான் பவா, சிபிஐ ஆகிய திரைப்படங்கள் மலையாளம் மட்டுமன்றி தமிழிலும் மிகப் பிரபலம்.

மலையாளத்தில் முன்னணி இயக்குநராக வலம் வந்த விஷ்ணு, கடந்த சில நாட்களாக கடுமையான வயிற்று வலியால் பாதிக்கப்பட்டு உள்ளார். கோவையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் இதற்காக பல மாதங்களாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால், இன்று சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது உடல் சிங்காநல்லூரில் உள்ள அவரது வீட்டில் உறவினர்கள் மற்றும் திரையுலகினர் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. மேலும், இயக்குநர் வினுவின் உடலுக்கு மலையாள நடிகர் நடிகைகள் மற்றும் இயக்குநர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும், இரங்கல் செய்திகளையும் பதிவிட்டு வருகின்றனர்.

MUST READ