அரசியல் சாசனத்தின் படி நடந்து கொள்ளாத ஆளுநர் பதவி விலக வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.
ஆளுநர் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடைப்பெற்றது.

போராட்டத்தை தொடங்கி வைத்து பேசிய அக்கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் பேசியதாவது,
இந்திய அரசாங்கம் மத சார்பற்ற நாடு என்று இந்திய அரசியலமைப்பில் எழுதி இருக்கக்கூடிய சூழலில் தமிழக ஆளுநர் இந்தியா மதச்சார்பற்ற நாடே இல்லை என்று தெரிவித்திருக்கிறார்.

தமிழக அரசாங்கம் நிறைவேற்றும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்க வேண்டும், இல்லையென்றால் திருப்பி அனுப்ப வேண்டும், அதுவும் இல்லையென்றால் திருத்தம் கேட்க வேண்டும் அதை செய்யாமல் மசோதாக்களை கிடப்பில் போட்டு வைத்திருக்கிறார்.
ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பல குடும்பங்களின் உயிர் பறிபோய் கொண்டு இருக்கிறது. இந்த சூழலில் அன்மையில் அந்த நிறுவனத்தோடு ஆளுநர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார், அதனால் அவரை எல்லோரும் ரம்மி ரவி என்று அழைக்கப்படுகிறார்.
தமிழ்நாடு என்ற பெயரை அவருக்கு கசக்கிற பெயராக மாறியிருக்கிறது.
ஆளுநர் கொடுத்த விளக்கம் அவர் சொன்னதை விட மிகவும் மோசமாக தான் இருக்கிறது.

அவர் சொல்லக்கூடிய விளக்கத்தை புரிந்து கொள்ளக்கூடிய அளவிற்கு தமிழ்நாட்டு மக்கள் இல்லை என்று சொல்ல வருகிறார்.
தமிழ்நாட்டில் தமிழை அங்கீகரிக்க மாட்டேன் என்றால் அவர் ஒரு ஆளுநராக இருப்பதற்கு அறவே தகுதி கிடையாது.
மத்திய அரசு இப்படிப்பட்ட ஆளுநர்களை பயன்படுத்திக் கொண்டு பாஜக ஆளாத மாநிலத்தில் நயவஞ்சக ஆட்சியை நடத்தி வருகிறது.
தமிழ்நாடு அரசு ஏற்றுக் கொள்ளாத, தமிழ்நாடு அரசியல் கட்சிகள் ஏற்றுக் கொள்ளாத ஒரு ஆளுநரை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.
ஒரு வேலை திரும்பப் பெறவில்லை என்றால் அந்த கோரிக்கையை முன்னிறுத்தி ஆளுநர் தேவை இல்லை என்று சொல்லக்கூடிய அனைத்து அமைப்புகளும் ஒருங்கிணைந்து மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம் என்று பாலகிருஷ்ணன் பேசினார்.
