தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கேப்டன் மில்லர் திரைப்படம் நேற்று 900க்கும் அதிகமான திரையரங்குகளில் கோலாகலமாக வெளியானது. மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த படத்தை காண ஏராளமான ரசிகர்கள் திரண்டு வந்தனர். பிரியங்கா மோகன், சிவராஜ்குமார், நிவேதிதா சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ்வான விமர்சனங்களை பெற்று வருகிறது. அருண் மாதேஸ்வரன் இயக்கியிருந்த இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க ஜிவி பிரகாஷ் இசை அமைத்திருந்தார்.
ஒடுக்கப்பட்ட மக்கள் கோயில்களில் நுழைவதை தடுக்கும் சமூகத்தில் தனக்கான உரிமையை பெற முயற்சிக்கும் வீரனின் கதை தான் கேப்டன் மில்லர். பிரிட்டிஷ் காலகட்டத்தில் சுதந்திரத்திற்காகவும் சுயமரியாதைக்காகவும் எப்படி போராடினார்கள் என்பதை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது.
ஒடுக்கப்பட்ட மக்களின் கோயில் நுழைவு உரிமையை அடிப்படையாக வைத்து #CaptainMiller என்கிற அருமையானதொரு படைப்பை சரியான நேரத்தில் கொண்டு வந்திருக்கும் நடிப்பு அசுரன் @dhanushkraja, திரு.@NimmaShivanna, இயக்குனர் #ArunMadheswaran, இசை அமைப்பாளர் சகோதரர் @gvprakash, @SathyaJyothi,…
— Udhay (@Udhaystalin) January 12, 2024

மேலும் கேப்டன் மில்லர் திரைப்படம் பல்வேறு தரப்பினரிடையே பாராட்டுகளையும் பெற்று வருகிறது. அந்த வகையில் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், “கொடுக்கப்பட்ட மக்களின் கோயில் நுழைவு உரிமையை அடிப்படையாக வைத்து கேப்டன் மில்லர் என்ற அருமையான படைப்பை சரியான நேரத்தில் கொண்டு வந்த தனுஷ், சிவராஜ் குமார், அருண் மாதேஸ்வரன், ஜிவி பிரகாஷ், பிரியங்கா மோகன், தயாரிப்பு நிறுவனம் உள்ளிட்ட அனைத்து பட குழுவினருக்கும் எனது பாராட்டுக்கள். மனித உரிமை போராட்டத்தின் மகத்துவத்தை விடுதலைப் போராட்ட கதை களத்தின் ஊடாக அழுத்தமாக பேசியுள்ளது கேப்டன் மில்லர்” என்று கேப்டன் மில்லர் திரைப்படம் குறித்து பாராட்டியுள்ளார்.