spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஅனைவருக்கும் உள்ளம் நிறைந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் - டிடிவி தினகரன்!

அனைவருக்கும் உள்ளம் நிறைந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் – டிடிவி தினகரன்!

-

- Advertisement -

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி  தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி சர்ச்சை நாயகனாக திகழ்வதாக அமமுக  பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை உலகெங்கும் கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் எனது இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.

we-r-hiring

இது தொடர்பாக டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், எத்தனையோ இன்னல்களை சந்தித்த போதிலும் உலகுக்கே உணவளிப்பதை முதன்மை பணியாக செய்து கொண்டிருக்கும் உழவர் பெருமக்களுக்கும், அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் கால்நடைகளுக்கும் நமது நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் வாய்ப்பாக பொங்கல் திருநாள் அமைந்திருக்கிறது.

இயற்கையையும் உழைப்பையும் போற்றும் உழவர் திருநாளில், நிலத்தை உழுவதில் தொடங்கி சாகுபடி செய்யும் வரை இரவு பகல் பாராது அரும்பாடுபட்டு உழைக்கும் விவசாய பெருங்குடிகளின் நலனை பேணிக் காத்திடவும் அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திடவும் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்வோம். அறுவடைத் திருநாளாம் இந்த பொங்கல் திருநாளில் தமிழக மக்கள் அனைவரின் வாழ்விலும், அன்பும் அமைதியும் நிலவி நலமும் வளமும் பெருக வேண்டும் என வாழ்த்தி மீண்டும் ஒரு முறை எனது உள்ளம் நிறைந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

 

MUST READ