spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாவிமானக் கட்டணம் பன்மடங்கு உயர்வு!

விமானக் கட்டணம் பன்மடங்கு உயர்வு!

-

- Advertisement -

 

ஏர்பஸ்ஸிடமிருந்து 500 விமானங்களை வாங்கும் இண்டிகோ நிறுவனம்!
File Photo

பொங்கல் பண்டிகையையொட்டி, இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கு செல்வதற்கான விமானக் கட்டணம் பன்மடங்கு உயர்ந்துள்ளது.

we-r-hiring

தமிழ் சினிமாவை புரட்டி போட வரும் கமல்ஹாசனின் அடுத்தடுத்த படங்கள்!

பொங்கல் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை காரணமாக, இண்டிகோ ஏர்லைன்ஸ், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், ஏர் ஏசியா உள்ளிட்ட விமான நிறுவனங்கள், விமானக் கட்டணங்களை உயர்த்தியுள்ளனர். பன்மடங்கு விமானக் கட்டணங்கள் உயர்ந்துள்ளதால், விமான பயணிகள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

மேலும், பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர்களுக்கு செல்ல கடைசி நேரத்தில் பலர் முன்பதிவு செய்வதால் கட்டணம் உயர்ந்துள்ளது. குறிப்பாக, மதுரை, தூத்துக்குடி, கோவை, திருச்சி, பெங்களூரு ஆகிய நகரங்களுக்கு விமானத்தில் செல்வதற்கான கட்டணம் ரூபாய் 15,000 முதல் ரூபாய் 21,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

அடித்து நொறுக்கும் ‘கேப்டன் மில்லர்’…. முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

இதனிடையே, டெல்லி, மும்பை, ஜெய்ப்பூர், சீரடி செல்லும் விமானங்களில் ஒரு சில இருக்கைகளே காலியாக உள்ள நிலையில், கோவா, அந்தமான் செல்லும் விமானங்களில் இருக்கைகள் நிரம்பின. ஏர் இந்தியா விமானத்தில் முதல் வகுப்பில் பயணிப்பதற்கான கட்டணம் ரூபாய் 41,000 ஆக உயர்ந்துள்ளது.

MUST READ